»   »  நேத்தே சொல்லல... பீப் தம்பி அடுத்த மனுவை போட்டுடுச்சி பாருங்க!

நேத்தே சொல்லல... பீப் தம்பி அடுத்த மனுவை போட்டுடுச்சி பாருங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நேற்றுதான் சொன்னோம்... அதைப் படிச்சாரோ என்னமோ.. பீப் ஸ்பெஷலிஸ்ட் சிம்பு அடுத்த மனுவைப் போட்டேவிட்டார்.

என்ன கேட்டு தெரியுமா... தன் மீது போலீசார் பதிவு செய்த வழக்கையே ரத்து செய்ய வேண்டும் என்று

இந்த ஆபாச பாடலை உருவாக்கிய வெட்கமோ, குற்ற உணர்வோ கொஞ்சமும் இல்லாத சிம்பு மற்றும் அனிருத் மீது பால் முகவர்கள் சங்கம் கொடுத்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Simbu files petition to cancel case against him

இந்த வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் சிம்பு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘ஒரே குற்றத்துக்காக ஒன்றுக்கு மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்ய முடியாது என்று உச்சநீதி மன்றம் ஏற்கனவே தீர்ப்பு அளித்துள்ளது.

இந்த தீர்ப்பின்படி, பீப் பாடல் பாடியதற்காக என் மீது ஒரு வழக்குத்தான் பதிவு செய்ய முடியும். கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் ஏற்கனவே என் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். எனவே, சென்னை குற்றப்பிரிவு போலீசார் என் மீது பதிவு செய்த வழக்கை ரத்து செய்யவேண்டும்,' என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் மாநில அரசு தலைமை குற்றவியல் வக்கீல் சண்முக வேலாயுதம் ஆஜராவதாக இருந்தது.

ஆனால், அவர் வேறு ஒரு நீதிமன்றத்தில் இருந்ததால், ஆஜராக முடியவில்லை. இதையடுத்து, இந்த மனு மீதான விசாரணை பிற்பகலுக்கு தள்ளிவைத்து நீதிபதி சுப்பையா உத்தரவிட்டுள்ளார்.

போலீசைச் சந்திக்க நான் பயப்படவில்லை என்று வாய்ச் சவடால் விட்டு வந்த சிம்பு, இப்போது அந்த கேஸை ரத்து பண்ணுங்க, இந்த கேஸை தள்ளி வைங்க, முன் ஜாமீன் கொடுங்க என்று பம்மிக் கொண்டிருப்பது ஏன்?

English summary
Beep song maker Simbu has filed another petition to cancel the case filed by Chennai police against him.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil