சிம்புவின் மாஸ்டர் ப்ளான்… கோடிக்கணக்கில் சம்பளத்தை உயர்த்த முடிவு… எல்லாம் இதனால் தானா?

சென்னை: மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களை சூப்பர் ஹிட் கொடுத்த சிம்புவின் மார்க்கெட் மீண்டும் உச்சம் தொட்டுள்ளது.

மாநாடு 100 கோடி வசூல் செய்த நிலையில், வெந்து தணிந்தது காடு திரையரங்குகளில் 50 நாட்களை கடந்தது.

இந்நிலையில், சிம்பு புதிய படங்களில் நடிக்க தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்திவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிம்பு கம்பேக்

சிம்பு கம்பேக்

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான சிம்பு, ஹீரோவாக நடிக்கத் தொடங்கிய போது, மாஸ் ஹீரோக்களுக்கான கதைகளில் மட்டுமே கமிட் ஆனார். ஆரம்பத்தில் சிம்புவுக்கு இது செட் ஆனாலும், அதன்பின்னர் அறிமுகமான தனுஷ் வெரைட்டி காட்டி நடிக்கத் தொடங்கினார். இதனால், சிம்புவின் மார்க்கெட் டவுன் ஆனதோடு, படங்களும் எதிர்பார்த்த அளவில் ஹிட்டாகவில்லை. அதேபோல், ஷூட்டிங்கிற்கு லேட்டாக வருவது என பல சர்ச்சைகளும் சிம்புவின் கேரியரை பதம் பார்த்தன.

ஹிட்டு.. கம்பேக்… ரிப்பீட்டு…

ஹிட்டு.. கம்பேக்… ரிப்பீட்டு…

இந்நிலையில், 'மாநாடு' திரைப்படம் மூலம் கம்பேக் கொடுத்த சிம்பு, 'வெந்து தணிந்தது காடு' படம் மூலம் இன்னும் மாஸ் காட்டினார். கடந்தாண்டு வெளியான மாநாடு திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடியை குவித்து சாதனை படைத்தது. அதேபோல், செப்டம்பர் மாதம் வெளியான 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக 50 நாட்களை கடந்து மாஸ் காட்டியது. முக்கியமாக மாநாடு, வெந்து தணிந்தது காடு இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றன.

சம்பளத்தை உயர்த்த முடிவு

சம்பளத்தை உயர்த்த முடிவு

இதனைத் தொடர்ந்து சிம்பு தற்போது பத்து தல படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் டிசம்பரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிருஷ்ணா இயக்கத்தில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் பத்து தல படத்தை தயாரித்து வருகிறது. பத்து தல ஷூட்டிங் முடிந்ததும் கொரோனா குமார், விண்ணைத்தாண்டி வருவாயா 2 ஆகிய படங்களில் சிம்பு நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல், மேலும் சில இயக்குநர்களிடமும் சிம்பு கதை கேட்டு வருகிறாராம். ஆனால், அடுத்தப் படம் கன்ஃபார்ம் ஆகும் முன்னரே, சம்பளத்தை உயர்த்த சிம்பு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

எல்லாம் இதனால் தானா?

எல்லாம் இதனால் தானா?

சிம்புவின் படங்களுக்கு ரசிகர்களிடம் மீண்டு நல்ல வரவேற்பு கிடைப்பதால், கலெக்‌ஷனிலும் சம்பவம் செய்து வருகிறது. அதனால், ஒரு படத்திற்கு 35 கோடி ரூபாய் வரை சம்பளம் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோர் 25 முதல் 30 கோடி வரை சம்பளம் வாங்குவதால், சிம்புவும் 35 கோடி வரை கேட்க முடிவு செய்துவிட்டாராம். இதனால், சிம்புவிடம் கதை சொல்ல போகும் இயக்குநர்கள் ஷாக்கிங் மோடில் உள்ளனர். ஆனாலும், இதுகுறித்து உண்மையான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X