»   »  சிம்பு தமிழகத்தை விட்டு தப்பிச்செல்லவில்லை- டி.ராஜேந்தர்

சிம்பு தமிழகத்தை விட்டு தப்பிச்செல்லவில்லை- டி.ராஜேந்தர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சிம்பு தமிழகத்தை விட்டு எங்கும் தப்பிச் செல்லவில்லை என்று சிம்புவின் தந்தையும், இயக்குனருமான டி.ராஜேந்தர் காஞ்சிபுரத்தில் இன்று பேட்டி அளித்திருக்கிறார்.

பீப் பாடல் விவகாரத்தில் நடிகர் சிம்பு தலைமறைவாக இருப்பதாகவும், அவரைத் தேட 3 தனிப்படைகள் அமைத்து இருப்பதாகவும் தமிழக காவல்துறையினர் தெரிவித்து இருந்தனர்.

இந்த விவகாரத்தில் நடிகர் சிம்பு எங்கும் தப்பிச் செல்லவில்லை அவர் தமிழ்நாட்டில் தான் இருக்கிறார் என்று சிம்புவின் வக்கீல் தியாகேஸ்வரன் நேற்று தெரிவித்து இருந்தார்.

Simbu is Not Hiding - T.Rajendar

இந்நிலையில் இன்று சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறும்போது "சிம்பு தமிழகத்தை விட்டு எங்கும் தப்பி செல்லவில்லை.

இந்த விவகாரத்தில் நடுநிலையானவர்கள் சிம்புவுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்.சிம்பு விஷயத்தில் நடிகை ராதிகா சரத்குமார் தெரிவித்த கருத்தை பெரிதுபடுத்த தேவையில்லை".

இவ்வாறு டி.ராஜேந்தர் தெரிவித்து இருக்கிறார். இந்த வழக்கில் பீப் பாடலை நீக்கம் செய்ய முடியாது என்று யூடியூப் நிறுவனம் கூறி விட்டதால்,வேறு வழிகளில் அந்தப் பாடலை தடை செய்ய காவல்துறையினர் முயன்று வருகின்றனர்.

தற்போது இந்த வழக்கில் சிம்பு வெற்றிபெற காஞ்சிபுரத்தில் உள்ள புகழ்பெற்ற வழக்கறுதீஸ்வரர் கோவிலில், சிறப்பு யாகங்களை அவரது குடும்பத்தினர் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

English summary
Beep Song Controversy: Actor Simbu is not Hiding Simbu's Father T.Rajendar Today Explain in Front of Media.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil