»   »  அண்ணன் செல்வராகவன் இயக்க தம்பி சிம்பு நடிக்கிறார்... அறிவித்தார் தனுஷ்

அண்ணன் செல்வராகவன் இயக்க தம்பி சிம்பு நடிக்கிறார்... அறிவித்தார் தனுஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: செல்வராகவன் இயக்கும் புதிய படத்தில் சிம்பு நடிக்க இருக்கிறார். இதை தனுஷ் தன் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

சிம்புவுக்கும் தனுசுக்கும் சண்டை என்று டுவிட்டரில் அவர்களின் ரசிகர்கள் சண்டை போட்டுக்கொண்டிருக்க, ஆனால் நண்பேண்டா ரேஞ்சுக்கு செல்ஃபி எடுத்து ஃபேஸ்புக், டுவிட்டரில் போடுகின்றனர் சிம்பும், தனுசும்.

இரண்டு ஆண்டுகளாகவே சிம்புவின் படம் எதுவும் வராமல் இருக்கும் நிலையில் செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை செல்வராகவனின் தம்பி தனுஷ் இயக்க இருக்கிறார்.

Simbu Join Hands With Selvaraghavan, Dhanush Asks Him To Learn From The Best!

தோல்வியில் துவண்ட செல்வா

‘இரண்டாம் உலகம்' தோல்விக்குப் பிறகு இயக்குநர் செல்வராகவனை எந்த ஹீரோவும் திரும்பி பார்க்கவில்லை. அவருடைய படத்தை தயாரிக்க எந்த தயாரிப்பாளரும் தயாராக இல்லை.

சிம்புக்கு காதல் கதை

ஆனாலும் விடாமுயற்சியில் விறுவிறுப்பான ஒரு காதல் கதையை தயார் செய்து, அதில் 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில் நடித்த சிம்பு-த்ரிஷாவை ஜோடியாக்கி புதிய படம் ஒன்றை இயக்க முயற்சி மேற்கொண்டார் செல்வராகவன். படத்துக்கு கூட அலைவரிசை என்று தலைப்பு வைத்தனர்.

கைவிடப்பட்ட படம்

கடந்த ஆண்டு ஏப்ரல் இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் என்று அறிவிப்பு வெளியானது. ஆனால் படம் குறிப்பிட்ட தேதியில் ஆரம்பிக்கப்படவில்லை. இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை, காரணம் எதுவும் சொல்லாமலேயே படத்தை கைவிட்டனர்.

தனுஷ் தயாரிப்பில் சிம்பு

இந்நிலையில் செல்வராகவன் இயக்கும் புதிய படத்தில் சிம்பு நடிக்கவிருப்பது இப்போது உறுதியாகியுள்ளது. இதை தனுஷ் தன் டுவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

தம்பி சிம்பு

இதுகுறித்து தனுஷ் தனது டுவிட்டரில் கூறியதாவது, ''அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தம்பி சிம்பு நடிக்க இருக்கிறார். இந்தப் படம் மிக சிறப்பானதாக அமையும். சகோதரர்களுக்கு வாழ்த்துகள்'' என்று அதில் தெரிவித்துள்ளார்.

கட்டாயத்தில் செல்வா

செல்வராகவன் இயக்கிய சமீபத்திய படங்கள் பாக்ஸ் ஆஃபீசில் வெற்றி பெறாததால், இப்படத்தை ஒரு வெற்றிப்படமாக தரவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் செல்வராகவன், அதற்கேற்ற மாதிரி ஒரு ஸ்கிரிப்ட்டை ரெடி செய்திருக்கிறாராம்.

சிம்புவும் உற்சாகம்

செல்வராகவனுடன் அடுத்த படத்தில் இணைந்துள்ளதை சிம்புவும் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். செல்வராகவனும் மகிழ்ச்சியாக இந்த தகவலைப் பகிர்ந்துள்ளார்.

கதாநாயகி திரிஷாவா?

செல்வராகவன் - சிம்பு இணையும் படம் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. படத்தின் நாயகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் யார் என்பது பற்றிய விவரம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. இருந்தாலும் அலைவரிசை படத்தில் ஒப்பந்தமான த்ரிஷாவும், யுவனும் படத்தில் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Dhanush's wish to Simbu for movie with his brother Selvaraghavan.
Please Wait while comments are loading...