»   »  கேட்காமலேயே இயக்குனருக்கு உதவிய சிம்பு: தங்க மனசுக்காரன்யா

கேட்காமலேயே இயக்குனருக்கு உதவிய சிம்பு: தங்க மனசுக்காரன்யா

Posted By:
Subscribe to Oneindia Tamil
சென்னை: சிம்பு இயக்குனர் நந்துவுக்கு உதவி செய்தது தெரிய வந்துள்ளது.

சிம்பு நந்து இயக்கத்தில் கெட்டவன் என்ற படத்தில் நடிக்கத் துவங்கினார். நந்துவுக்கும், சிம்புவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு படம் பாதியில் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் நந்து அண்மையில் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

நந்து

நந்து

நான் தான் கெட்டவன் பட இயக்குனர் நந்து என்று அவர் டிவி நிகழ்ச்சியில் கூறினார். கெட்டவன் பட பிரச்சனைகள் பற்றி பேசி சிம்புவை வசைபாடுவாரோ என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவரோ சிம்புவை புகழ்ந்து பேசினார்.

பணம்

பணம்

பிரசவத்திற்காக என் மனைவியை மருத்துவமனையில் சேர்த்திருந்தேன். குழந்தை பிறந்தது. சிகிச்சைக்கான செலவு ரூ.60 ஆயிரம் என்றார்கள். என்னிடம் பணம் இல்லை என்றார் நந்து.

சிம்பு

சிம்பு

கையில் பணம் இல்லாமல் அல்லாடியோது சிம்பு என்னை அழைத்திருந்தார். அப்போது நான் பதட்டதுடன் இருப்பதை கவனித்த அவர் அதற்கான காரணத்தை கேட்டறிந்தார். நானும் மருத்துவமனை பில் பிரச்சனை பற்றி கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினேன் என நந்து தெரிவித்தார்.

உதவி

உதவி

நான் மருத்துவமனைக்கு வந்தபோது சிம்புவின் நண்பர் தீபன் எனக்கு முன்பு வந்து பில்லை கட்டிவிட்டார். அங்கேயே சிம்பு பணம் கொடுத்திருந்தால் நீங்கள் வாங்கியிருக்க மாட்டீர்கள் அதனால் தான் என்னை அனுப்பி வைத்தார் என்று தீபன் கூறினார். சிம்பு செய்த உதவியை மறக்க மாட்டேன் என்றார் நந்து.

English summary
Kettavan movie director Nandu said that Simbu has a golden heart and helped him financially at a time his wife gave birth to a baby.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil