twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவை விட்டும் சிம்பு ஓடி ஒளியமாட்டார்.... டி. ராஜேந்தர்

    By Manjula
    |

    சென்னை: பீப் பாடல் சர்ச்சையில் தமிழ்நாட்டை விட்டு வெளியேற மாட்டோம், சட்டரீதியாக இந்த பிரச்சினையை எதிர்கொள்வோம் என்று சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் உறுதி தெரிவித்திருக்கிறார்.

    சிம்பு பாடி, அனிருத் இசையமைத்ததாக கூறப்படும் பீப் பாடல் தமிழ்நாட்டில் தற்போது ஏகப்பட்ட சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.

    இந்த விவகாரத்தில் சிம்புவின் தாயார் உஷா தமிழ்நாட்டை விட்டு வெளியேறுவோம் என்று கூறிய நிலையில், தமிழ்நாட்டை விட்டு வெளியேற மாட்டோம் என்று சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் இன்று தெரிவித்திருக்கிறார்.

    பீப் பாடல்

    பீப் பாடல்

    ஆபாச சொற்களுடன் கூடிய பீப் பாடல் பாடி அதனை வெளியிட்ட குற்றத்திற்காக சிம்பு, அனிருத் ஆகியோருக்கு கோவை போலீசார் சம்மன் அனுப்பி நேரில் ஆஜராக உத்தரவிட்டனர். ஆனால் இருவருமே கோவை போலீசார் சொன்ன தேதியில் நேரில் ஆஜராகவில்லை. இதனால் வருகின்ற ஜனவரி 2 ம் தேதி சிம்பு, அனிருத் இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று கோவை போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பியிருக்கின்றனர்.

    ஒத்திவைப்பு

    ஒத்திவைப்பு

    இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு நடிகர் சிம்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.சென்னை உயர் நீதி மன்றத்தில் நடந்த இந்த விசாரணையில், சிம்பு முன்ஜாமீன் கோரிய வழக்கை ஜனவரி 4 ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.மேலும் இந்த வழக்கில் சிம்புவை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைத்து அவரைத் தேடி வருவதாக காவல் துறை வட்டாரங்களில் தகவல்கள் வெளியானது.

    தமிழ்நாட்டை விட்டு

    தமிழ்நாட்டை விட்டு

    இந்த விவகாரம் குறித்துப் பேசிய சிம்புவின் தாயார் உஷா தேவைப்பட்டால் இந்தத் தமிழ்நாட்டை விட்டு வெளியேறவும் தாங்கள் தயாராக இருப்பதாக கடந்த வாரம் பேட்டி அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

    சிறப்பு பூஜைகள்

    சிறப்பு பூஜைகள்

    இந்நிலையில் சிம்பு இந்த வழக்கில் இருந்து வெளியேற காஞ்சிபுரத்தில் உள்ள வழக்கறுத்தீஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் யாகம் போன்றவற்றை சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் இன்று நடத்தினார்.

    செய்யாத குற்றத்திற்காக

    செய்யாத குற்றத்திற்காக

    இந்த பூஜைகள் முடிந்த பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய டி.ராஜேந்தர் "செய்யாத குற்றத்துக்கு சிலர் சதி செய்திருக்கிறார்கள். நான் வாழ்க்கையில் என்ன செய்தாலும், என்னுடைய மனது மட்டும் எப்போதும் உடைந்து போனதில்லை. காரணம், என்னை வாழ வைத்த தெய்வமும், என்னுடைய ரசிகர் பெருமக்களான தமிழக மக்கள் தான். தமிழகத்தில் எவ்வளவோ காலகட்டமாக போராடிக் கொண்டிருக்கின்றேன்.

    சிம்புவுக்கு பக்கபலமாக

    சிம்புவுக்கு பக்கபலமாக

    இந்தப் பிரச்சினையில் சிம்புவுக்கு பக்கபலமாக அவருடைய ரசிகர்கள் நிற்கிறார்கள். எங்களுக்கு பக்கபலமாக நின்று அமைப்புகள், தாய்மார்கள், பெண்கள் கொடுத்த ஆதரவை மறக்க மாட்டேன். சிம்பு எங்கும் தலைமறைவாகவில்லை. சட்டரீதியாக அவர் பிரச்சினைகளை எதிர்கொள்வார்.

    மழை, இடி, வெள்ளம்

    மழை, இடி, வெள்ளம்

    என் மகன் தமிழ்நாட்டை விட்டு அல்ல, இந்தியாவை விட்டு ஓடி ஒளிய மாட்டான். எந்த போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்க வேண்டும், ஒப்படைக்கிறோம் என்று சொன்னவர் என் மனைவி. எத்தனை இடி வந்தாலும், மழை வந்தாலும், வெள்ளம் வந்தாலும் டி.ராஜேந்தர் தமிழ்நாட்டில் தான் இருப்பான். எதிர்த்து நிற்பான் குரல் கொடுப்பான்." இவ்வாறு டி.ராஜேந்தர் தெரிவித்திருக்கிறார்.

    English summary
    Beep Song Controversy: "Simbu not Absconding Anywhere. He will Face Legal Problems" Simbu's Father T.Rajendar says in Front of Media Today Morning.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X