சிம்பு பிறந்தநாளில் பத்து தல ஃபர்ஸ்ட் சிங்கிள்.. இசையில் தெறிக்கவிடப் போகும் ஏஆர் ரஹ்மான்
சென்னை: மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களின் வெற்றியால் வெறித்தனமாக கம்பேக் கொடுத்துள்ளார் சிம்பு.
இதனைத் தொடர்ந்து சிம்பு நடித்துள்ள பத்து தல படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சிம்புவுடன் கெளதம் கார்த்திக், கலையரசன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் மார்ச் 30ம் தேதி ரிலீஸாகிறது.
இந்நிலையில், சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு பத்து தல ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேங்ஸ்டர் ஏஜிஆர்
கடந்த சில வருடங்களாக லைம் லைட்டில் இல்லாமல் இருந்த சிம்பு, மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்கள் மூலம் செம்ம மாஸ்ஸாக கம்பேக் கொடுத்தார். இதனால் உற்சாகமான சிம்பு ரசிகர்கள் அவரது அடுத்த படத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதன்படி சிம்பு நடித்து வந்த பத்து தல ஷூட்டிங் கடந்த நவம்பரில் முடிவுக்கு வந்தது. முன்னதாக டிசம்பர் மாதம் ரிலீஸாகவிருந்த பத்து தல படத்தை மார்ச் 30ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்தது. இதில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கேரக்டரில் சிம்பு நடித்துள்ளார்.

சிம்புவின் பிறந்தநாள்
பத்து தல சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு, பிப்ரவரி 3ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மார்ச் 30ம் தேதி தான் வெளியாகும் என உறுதியாகியுள்ளது. பத்து தல ஷூட்டிங் முடிந்ததுமே போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் பிஸியாகிவிட்டார் இயக்குநர் கிருஷ்ணா. இந்தப் படம், கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் ஹிட்டடித்த 'முஃப்தி' படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிப்ரவரி 3ம் தேதி சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு பத்து தல படத்தின் அப்டேட் வரும் என ரசிகர்கள் வெயிட்டிங்கில் உள்ளனர்.

பத்து தல ஃபர்ஸ்ட் சிங்கிள்
சிம்புவுடன் பிரியா பவானி சங்கர், கவுதம் கார்த்திக், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள பத்து தல படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். விண்ணத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா, செக்க சிவந்த வானம், வெந்து தணிந்தது காடு படங்களில் ஒன்றாக பணிபுரிந்துள்ள சிம்பு - ஏஆர் ரஹ்மான் காம்போ மீண்டும் பத்து தல படத்திலும் இணைந்துள்ளது. அதனால் இந்தப் படத்தின் இசையும் வெறித்தனமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில், சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு பிப்ரவரி 2ம் தேதி பத்து தல ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

ட்விட்டரில் ட்ரெண்டிங்
சிம்புவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக பத்து தல ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸாகலாம் என்ற தகவல், ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது. இதனால் பத்து தல, பத்து தல ஃபர்ஸ்ட் சிங்கிள் என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர் சிம்பு ரசிகர்கள். இந்த ஃபர்ஸ்ட் சிங்கிள் சிம்புவின் அறிமுக பாடலாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. சிம்புவுக்காக ஏஆர் ரஹ்மான் கம்போஸ் செய்துள்ள மாஸ் பிஜிஎம் எப்படி இருக்கும் என கேட்க ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். ஆனாலும் சிம்புவின் பிறந்தநாளில் பத்து தல ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸாகும் என்பதை படக்குழு தரப்பில் இருந்து அறிவிக்கவில்லை.


Click it and Unblock the Notifications