Don't Miss!
- News
மக்களவை தேர்தல் இன்று நடந்தால் வெல்லப்போவது யார்? பாஜக, காங்கிரஸ்.. யாருக்கு நல்ல செய்தி! பரபர சர்வே
- Sports
உலககோப்பை ஹாக்கி - ஜப்பானை துவம்சம் செய்த இந்தியா.. 8-0 என்ற கோல் கணக்கில் அபாரம்
- Finance
கச்சா எண்ணெய் இறக்குமதி இன்னும் ரஷ்யாவில் இருந்து அதிகரிக்கலாம்.. காரணத்தை கேட்டா கடுப்பாகிருவீங்க!
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
பத்து தல புது ரிலீஸ் தேதி... போஸ்டரில் கெத்து காட்டிய சிம்பு... கூஸ்பம்ஸான ரசிகர்கள்!
சென்னை: மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களைத் தொடர்ந்து பத்து தல படத்தில் நடித்து முடித்துள்ளார் சிம்பு.
'சில்லுன்னு ஒரு காதல்' கிருஷ்ணா இயக்கியுள்ள பத்து தல, கன்னடத்தில் வெற்றி பெற்ற 'முஃப்தி' படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
சிம்புவுடன் கெளதம் கார்த்திக், கலையரசன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் 2022 டிசம்பரில் வெளியாகவிருந்தது.
ஆனால், சொன்னபடி வெளியாகாத பத்து தல படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு தற்போது அறிவித்துள்ளது.
டிவிட்டரில் ட்ரெண்டாகும் வாரிசு ஆடியோ லான்ச்... எஸ்கேப் ஆகும் முடிவில் சிம்பு... என்ன காரணம்?

சிம்புவின் கேங்ஸ்டர் அவதாரம்
கடந்தாண்டு வெளியான மாநாடு திரைப்படம் மூலம் கம்பேக் கொடுத்த சிம்பு, அதனைத் தொடர்ந்து வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்திருந்தார். கெளதம் மேனன் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம் ரிலீஸான 'வெந்து தணிந்தது காடு', சிம்புவுக்கு மேலும் ஒரு சூப்பர் கம்பேக் படமாக அமைந்தது. இந்தப் படத்தில் முத்து என்ற கேரக்டரில் கேங்ஸ்டர் குரூப்பில் ஒருவராக நடித்திருந்தார் சிம்பு. மேலும் இதன் அடுத்த பாகம் விரைவில் உருவாகும் எனவும், அதில் சிம்பு கேங்ஸ்டராகவே நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

பத்து தல ஏஜிஆர்
மாநாடு, வெந்து தணிந்தது காடு மூலம் மீண்டும் தனது ஆட்டத்தை தொடங்கியுள்ள சிம்புவின் படங்களுக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில், அவர் நடித்து வந்த 'பத்து தல' படத்தின் ஷூட்டிங், கடந்த மாதம் 23ம் தேதி நிறைவடைந்தது. ஆனால், டிசம்பர் மாதம் ரிலீஸாகவிருந்த பத்து தல சில காரணங்களால் தள்ளி வைக்கப்படுவதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்தப் படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டராக சிம்பு நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய ரிலீஸ் தேதி
இந்நிலையில், பத்து தல சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு, பிப்ரவரி 3ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரசிகர்களின் இந்த எதிர்பார்ப்புக்கு படக்குழு தரப்பில் இருந்து தற்போது பதில் கிடைத்துள்ளது. அதன்படி, பத்து தல திரைப்படம் 2023ம் ஆண்டு மார்ச் 30ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த மாதம் தான் சூட்டிங் நிறைவானதால், போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் இயக்குநர் கிருஷ்ணா பிஸியாக இருக்கிறார். அதனால், மார்ச் மாதம் இறுதியில் பத்து தல ரிலீஸ் தேதியை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

சிம்புவின் 50வது திரைப்படம்
பத்து தல படத்தின் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்துள்ள படக்குழு, சிம்புவின் செம்ம கெத்தான போஸ்டரையும் ரிலீஸ் செய்துள்ளது. அதில் காரின் பேனட்டில் கறுப்பு வேஷ்டி, சட்டையில் சிம்பு மாஸ்ஸாக அமர்ந்திருப்பதை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். கன்னடத்தில் சிவ ராஜ்குமார் நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த 'முஃப்தி' படத்தின் தமிழ் ரீமேக்கான பத்து தல படத்தில் சிம்புவுடன் பிரியா பவானி சங்கர், கவுதம் கார்த்திக், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏஆர் ரஹ்மான் இசையமைக்கும் படத்தை, ஸ்டூடியோ கிரீன் தயாரித்துள்ளது. இந்நிலையில், சிம்பு தனது 50வது திரைப்படம் பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என முடிவெடுத்துள்ளாராம். சூப்பர் மேன் கதையுடன் ஏஆர் முருகதாஸ் காத்திருப்பதாகவும், இந்தக் கூட்டணியில் தான் சிம்புவின் 50வது திரைப்படம் உருவாகும் எனவும் சொல்லப்படுகிறது.