»   »  சந்தானம் நடித்த சர்வர் சுந்தரம் டீசர்... மீண்டும் நண்பனுக்காக உதவிய சிம்பு!

சந்தானம் நடித்த சர்வர் சுந்தரம் டீசர்... மீண்டும் நண்பனுக்காக உதவிய சிம்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பலவித விமர்சனங்கள் சிம்பு மீது இருந்தாலும், நண்பர்களுக்கு உதவுவதில் அவருக்கு இணையில்லை என்பார்கள் அவரது நட்பு வட்டத்தில்.

சந்தானத்துக்கு திரையில் இத்தனை மவுசு வர முக்கியக் காரணம் சிம்பு. அதனால் சிம்பு சொன்னால் கேட்பார் சந்தானம். அதே போல சந்தானத்துக்கு போதிய அளவுக்கு உதவிகள் செய்து வருகிறார் சிம்பு.

Simbu releases Server Sundaram teaser

ஏற்கெனவே சந்தானம் நடிக்கும் ஒரு படத்துக்கு இசையமைக்க ஒப்புக் கொண்டுள்ள சிம்பு, அடுத்து சந்தானம் நடித்துள்ள சர்வர் சுந்தரம் படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார்.

நேற்று தன் பிறந்த நாளன்று இந்த டீசர் வெளியீட்டை நடத்தினார் சிம்பு.

அறிமுக இயக்குநர் ஆனந்த் பால்கி இயக்கி இருக்கும் 'சர்வர் சுந்தரம்' படத்தில், வைபவி ஷண்டிலியா கதாநாயகியாக நடித்திருக்கிறார். நடிகர் நாகேஷின் பேரனான நாகேஷ் பிஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பி கே வர்மா, இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணியாற்றியுள்ளனர்.

"பல ஆண்டுகளாக சிலம்பரசன் - சந்தானம் இடையே இருந்து வரும் நட்புறவை பற்றி எல்லோருக்குமே தெரியும். இந்த தருணத்தில் சிலம்பரசன் அவர்கள் எங்கள் படத்தின் டீசரை வெளியிட்டிருப்பது, எங்கள் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் அளவுகடந்த மகிழ்ச்சியாக இருக்கின்றது. ஒரு அறிமுக இயக்குநருக்கு இதைவிட பெருமை என்ன இருக்கின்றது? இதை டீசர் வெளியீடு என்று சொல்வதை விட, நட்புறவின் கொண்டாட்டம் என்றே சொல்லலாம்," என்கிறார் இயக்குநர் ஆனந்த் பால்கி.

English summary
Actor Simbu has released the first teaser of Santhanam starrer Servar Sundaram.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil