»   »  ஹாட் சேல்ஸில் அன்பானவன் அடங்காதவன் அசராதவன்!

ஹாட் சேல்ஸில் அன்பானவன் அடங்காதவன் அசராதவன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிம்புவின் அடுத்த ரிலீஸான அன்பானவன் அடங்காதவன் அசராதவன் (அஅஅ) படத்தின் விற்பனை சூடுபிடித்துள்ளது.

இந்தப் படத்தின் சென்னை உரிமையை ஜாஸ் சினிமாஸ் கைப்பற்றியுள்ளது. இதற்காக பெரிய விலையும் கொடுத்துள்ளது.


Simbu's AAA Tamil Nadu rights fully sold out

மதுரை - ராமநாதபுரம் விற்பனை உரிமை சுஷ்மா சினி ஆர்ட்ஸுக்கும், வட - தென்னாற்காடு விநியோக உரிமை செந்திலுக்கும் தரப்பட்டுள்ளது. ஏக போட்டி நிலவும் செங்கல்பட்டு ஏரியா உரிமையை லலித் என்பவர் வாங்கியுள்ளார். திருநெல்வேலி - கன்னியாகுமரி உரிமையை மணிகண்டன் பெற்றுள்ளார்.


சேலம் விநியோக உரிமை செல்வராஜுக்கும், கோவை உரிமை கந்தசாமி ஆர்ட்ஸ் சென்டருக்கும தரப்பட்டுள்ளது.


இன்னும் ட்ரைலர், பாடல்கள் கூட வெளியாகாத நிலையில் இந்தப் படம் முழுவதுமாக விற்பனையாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு பாகங்களாக தயாராகும் அஅஅ-வின் முதல் பாகம் வரும் ஜூன் 23-ம் தேதி ரம்ஜான் ஸ்பெஷலாக வெளியாகிறது.

English summary
Simbu's AAA distribution rights fully sold out like hot cake even before the audio and trailer launch.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil