»   »  ஷூட்டிங்கிற்கு அனுமதி மறுப்பு: தாய்லாந்து சென்று சும்மா திரும்பிய சிம்பு அன்ட் கோ

ஷூட்டிங்கிற்கு அனுமதி மறுப்பு: தாய்லாந்து சென்று சும்மா திரும்பிய சிம்பு அன்ட் கோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிம்புவின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படக்குழு தாய்லாந்து சென்ற வேகத்தில் நாடு திரும்பியுள்ளது.

சிம்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஓராண்டுக்கும் மேலாக நடந்து வருகிறது.


படத்தில் சிம்பு நான்கு வித்தியாசமான கதாபாத்திரங்களில் வருகிறார்.


தாய்லாந்து

தாய்லாந்து

தாய்லாந்தில் உள்ள குகை ஒன்றில் சண்டை காட்சியை படமாக்க திட்டமிட்டனர். அந்த குகையில் இதுவரை எந்த இந்திய படத்தின் படப்பிடிப்பும் நடந்தது இல்லை.


அனுமதி

அனுமதி

குகையில் சண்டை காட்சி மற்றும் சில காட்சிகளை படமாக்க படக்குழு தாய்லாந்து கிளம்பிச் சென்றது. அங்கு சென்ற பிறகு படப்பிடிப்பை நடத்த அனுமதி கிடைக்கவில்லை.


ஹைதராபாத்

ஹைதராபாத்

அனுமதி கிடைக்காததால் படக்குழு தாய்லாந்து சென்ற வேகத்தில் நாடு திரும்பியது. ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளார்களாம்.


சிம்பு

சிம்பு

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்திற்காக சிம்பு வெயிட் போட்டார். தற்போது இளமையாக வரும் கதாபாத்திரத்திற்காக உடல் எடையை குறைக்கிறார்.


English summary
Simbu's ‘Anbanavan Asaradhavan Adangadhavan’ team was denied permission to shoot some scenes in Thailand. So, the team returned to Chennai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil