»   »  அச்சம் என்பது மடைமையடா... சிம்புவிற்கு உதவி செய்த ஏ.ஆர்.ரகுமான்

அச்சம் என்பது மடைமையடா... சிம்புவிற்கு உதவி செய்த ஏ.ஆர்.ரகுமான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அச்சம் என்பது மடமையடா படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகி சிம்பு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

ஆனால் வெறும் 1 நிமிடங்களுக்கு சற்று அதிகமாக ஓடும் இந்த டிரெய்லர் வெளியானதன் பின்னணியில் ஏ.ஆர்.ரகுமான் இருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

பீப் பாடல் வெளியாகி சிம்பு தனது மதிப்பை இழந்து நிற்கும் இந்த நேரத்தில் நாம் ஏதாவது செய்து அவரைக் காப்பாற்ற வேண்டும் என்று கவுதம் மேனனும், ரகுமானும் பேசி முடிவெடுத்தே இந்த டிரெய்லரை வெளியிட்டு இருக்கின்றனர்.

Simbu's Achcham Enbadhu Madamaiyada Trailer

இதற்காக தனது மற்ற பணிகளை தள்ளி வைத்து விட்டு இந்தப் படத்தின் பணிகளை முடித்துக் கொடுத்திருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான்.

படத்தின் பாடல்களை ரகுமான் முடித்துக் கொடுத்ததும் மிகவும் விரைவாக டிரெய்லரை தயார் செய்து நேற்று நள்ளிரவு 1 மணிக்கு மேல் படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர்.

ஆகஸ்ட் மாதம் படத்தின் முதல் டீஸர் வெளியானது. அதற்குப் பின் அச்சம் என்பது மடமையடா படத்தின் போஸ்டரைக் கூட படக்குழுவினர் இதுவரை வெளியிடவில்லை.

இந்நிலையில் நேற்று எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி படத்தின் டிரெய்லரை வெளியிட்டது பலரின் கவனத்தையும் கவர்ந்தது. இதைவிட தனது படங்களைப் பற்றி சமூக வலைதளங்களில் அதிகம் பகிராத ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை வெளியிட்டு இருப்பதும் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

இதனால் இதன் பின்னணியில் ரகுமான் இருந்து சிம்புவிற்கு உதவி செய்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த டிரேய்லரின் மூலம் சிம்பு மீண்டு வந்து விட்டதாக அவரது ரசிகர்கள் தற்போது சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் படத்தையும் விரைவாக முடித்து வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு இருப்பதாக கூறுகின்றனர்.

English summary
Simbu's Achcham Enbadhu Madamaiyada Trailer was Released Yesterday. Now Sources said Music Composer AR Rahman Appeared to exist in the Background of this Trailer.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil