»   »  'அச்சம் என்பது மடமையடா' ரிலீஸான இன்றே ஃபேஸ்புக் லைவில் சுடச்சுட லீக்கானது!

'அச்சம் என்பது மடமையடா' ரிலீஸான இன்றே ஃபேஸ்புக் லைவில் சுடச்சுட லீக்கானது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிம்புவின் அச்சம் என்பது மடமையடா படம் ரிலீஸான இன்றே ஃபேஸ்புக் லைவில் வெளியாகி ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடித்துள்ள அச்சம் என்பது மடமையடா படம் பல முறை தள்ளிப் போய் இன்று ரிலீஸாகியுள்ளது. சிம்பு ரசிகர்கள் தியேட்டர்களுக்கு படையெடுத்து வருகிறார்கள்.

Simbu's AYM on Facebook live

படத்தை பார்த்தவர்கள் படம் சூப்பர், செம, மெர்சல் என்று புகழ்ந்துதள்ளிக் கொண்டிருக்கிறார்கள். மஞ்சிமாவுக்கு இது முதல் படம் போன்றே இல்லை நடிப்பில் அசத்தியிருக்கிறார் என்று விமர்சிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஃபேஸ்புக் லைவில் அச்சம் என்பது மடமையடா படம் இன்றே வெளியாகியுள்ளது. ஒரு ஃபேஸ்புக் பக்கத்தில் டைட்டில் கார்டு துவங்கி சில காட்சிகள் வருகின்றன.

மற்றொரு ஃபேஸ்புக் பக்கத்தில் தள்ளிப் போகாதே பாடல் மற்றும் 10 நிமிட காட்சிகள் வருகின்றன. படம் வெளியான அன்றே ஃபேஸ்புக் லைவில் இப்படி காட்சிகள் கசிந்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

English summary
Simbu's Acham Yenbadhu Madamaiyada has been leaked on Facebook live on the same day as the movie's release.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil