»   »  பீப் பாடல்: சிம்புவை நடிகர் சங்கம் கேள்வி கேட்காதது ஏன்? சரத்குமார் புது பஞ்சாயத்து

பீப் பாடல்: சிம்புவை நடிகர் சங்கம் கேள்வி கேட்காதது ஏன்? சரத்குமார் புது பஞ்சாயத்து

Posted By:
Subscribe to Oneindia Tamil

பீப் பாடல் தவறானது என்று கூறியுள்ள சரத்குமார், இந்த விவகாரத்தில் நடிகர் சங்கம் ஏன் தலையிடவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

சிம்பு பாடிய பாடல் ஒன்று சமீபத்தில் இணையத்தில் வெளியானது. பீப் பாடல் என்கிற பெயரில் வெளியான அந்தப் பாடல் ஆபாச அர்த்தங்களுடன் இருந்ததால், கடும் எதிர்ப்பைச் சம்பாதித்தது. சிம்பு, அனிருத் மீது வழக்குகள் பாய்ந்துள்ளன. இது குறித்து விளக்கம் அளிக்குமாறு இருவருக்கும் கோவை போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், பெண்களை இழிவுபடுத்தி சிம்பு பாடல் பாடியது தவறானது. யார் வந்து பெண்ணையோ, பெண் இனத்தையோ தவறாக சித்தரிக்கின்ற அது படமாக இருந்தாலும் சரி, பாடலாக இருந்தாலும் சரி அது வரவேற்கத்தக்கது அல்ல என்பது என்னுடைய கருத்து, அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது என்று கூறியுள்ளார்.

தாமரையின் அறிக்கை

தாமரையின் அறிக்கை

இந்த பிரச்னை நீண்டு கொண்டிருக்கும்போது, தாமரையின் அறிக்கையை இன்று படித்து பார்த்தேன். அவர் என்ன கேட்டு இருக்கிறார் என்றால், சிம்பு இந்த பாடலை எழுதியிருந்தாலும், இதைத்தான் நான் இருபது வருடங்களாக, பாடலாசிரியராக வந்தது முதல் சொல்லிக் கொண்டு இருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்கள். அன்று எழுதியிருக்கிற பாடல் வேறு, இன்று எழுதுகின்ற பாடல் வேறு.

சிம்புவின் பாடல்

சிம்புவின் பாடல்

ஏதாவது ஒரு பாடலை நான் சுற்றிக்காட்டினால் இது தவறான பாடலை நான் சொல்கிறேன் என்று வந்துவிடும். தாமரை அறிக்கையை இன்று பார்த்தேன். தரைக்குறைவான பாடலை எழுதியது கிடையாது. என் பேனாவும் எழுதவும் செய்யாது என்று அவங்க சொல்லியிருக்காங்க. என்னை பொறுத்தவரைக்கும் தவறு என்பது தவறுதான். சிம்பு நான் கோர்ட்டிலேயே சந்தித்து விடுகிறேன் என்று சொல்லியிருக்கிறார்.

நடிகர் சங்கம் கேட்கலையே

நடிகர் சங்கம் கேட்கலையே

நான் நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோது, திரையுலகில் ஒவ்வொருமுறையும் பிரச்னை ஏற்படும்போதெல்லாம், நடிகர் சங்கத் தலைவர் என்ன செய்கிறார் என்று கேள்வி எழுப்பினீர்கள். ஆனால் இப்போது நடிகர் சங்கத்திடம் ஏன் கேள்வி எழுப்பவில்லை.

இளையராஜாவின் தவறு

இளையராஜாவின் தவறு

பீப் பாடல் விவகாரத்தில் நடிகர் சங்கம் ஏன் தலையிடவில்லை. பத்திரிகை என்பது நான்காவது தூண். பத்திரிகையாளரிடம் இளையராஜா நடந்துகொண்டது தவறு என்றும் சரத்குமார் கூறியுள்ளார்.

English summary
Sarathkumar Questions Nadigar Sangam Simbu's Controversial Beep Song issue. Simbu's song is wrong he said.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil