முதல்முறையாக இந்தி பாட்டுப்பாடிய சிம்பு.. ஹூமா குரேஷியின் டபுள் எக்ஸ் எல் படத்தில் வேறலெவல் சாங்!

மும்பை: வலிமை ஹீரோயின் ஹூமா குரேஷி நடிப்பில் உருவாகி உள்ள டபுள் எக்ஸ் எல் படத்தின் #TaaliTaali பாடலை சிம்பு பாடி உள்ளார்.

தமிழில் தனது படங்களுக்கு மட்டுமின்றி மற்ற ஹீரோக்கள் படத்திற்கு சில பாடல்களை பாடிய சிம்பு சமீபத்தில் டோலிவுட் படமான வாரியர் படத்தில் இடம்பெற்ற புல்லட் பாடலை பாடியிருந்தார்.

இந்நிலையில், முதல்முறையாக இந்தி பட பாடலை பாடியுள்ளேன் என நடிகர் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஓடிடியில் வெந்து தணிந்தது காடு

ஓடிடியில் வெந்து தணிந்தது காடு

இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலை இந்த படமும் எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 70 கோடி உடன் தியேட்டர் வசூல் தடைபட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகின.

வல்லவன் சிம்பு

வல்லவன் சிம்பு

கமல்ஹாசனை போலவே தானும் ஒரு சகலகலா வல்லவன் என்பதை சிறு வயதிலேயே தெளிவுப்படுத்தி விட்டார் சிம்பு. நடிப்பு, பாடல் எழுதுவது, பாடுவது, இயக்குவது என ஏகப்பட்ட வேலைகளை சினிமாவில் செய்து சாதித்துள்ளார். இந்நிலையில், மற்ற மொழி படங்களிலும் பாட்டுப் பாட தொடங்கி உள்ளார் சிம்பு.

ஹிட்டடித்த புல்லட்

ஹிட்டடித்த புல்லட்

இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் தெலுங்கு மற்றும் தமிழ் படமாக உருவான வாரியர் திரைப்படத்தில் இடம் பெற்ற புல்லட் பாடலை தமிழ் மற்றும் தெலுங்கில் பாடி அசத்தினார் நடிகர் சிம்பு. அந்த படமே ஓடாத நிலையில், க்ரித்தி ஷெட்டிக்காகவும், சிம்புவின் குரலுக்காகவும் பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

முதல் முறையாக இந்தியில்

முதல் முறையாக இந்தியில்

இந்நிலையில், தெலுங்கு தொடர்ந்து முதல் முறையாக இந்தி படத்திற்கும் ஒரு இந்தி பாடலை பாடியுள்ளார் நடிகர் சிம்பு. காலா, வலிமை உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த நடிகை ஹூமா குரேஷி மற்றும் லிங்கா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த சோனாக்‌ஷி சின்ஹா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள டபுள் எக்ஸ் எல் படத்தில் இடம்பெற்றுள்ள #TaaliTaali பாடலை சிம்பு பாடி உள்ளார்.

நண்பன் மகத்துக்காக

நண்பன் மகத்துக்காக


அந்த பாடல் வீடியோவை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்த நடிகர் சிம்பு, நண்பன் மகத்துக்காக இந்த பாடலை பாடினேன் என்றும் கேப்ஷன் போட்டுள்ளார். சோனாக்‌ஷி சின்ஹா மற்றும் ஹூமா குரேஷியுடன் இந்த படத்தில் மகத்தும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X