»   »  இந்த மாசம் இது நம்ம ஆளை ரிலீஸ் பண்ணியே தீருவோம்!

இந்த மாசம் இது நம்ம ஆளை ரிலீஸ் பண்ணியே தீருவோம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நியாயமாக கடந்த ஆண்டு மே மாதமே வந்திருக்க வேண்டிய படம் பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடித்த இது நம்ம ஆளு.

ஆனால் ஏகப்பட்ட இழுபறிகள், சச்சரவுகள், பிணக்குகளில் சிக்கிய இந்தப் படம் வருமா வராதா என்ற நிலைமைக்குள்ளாகிவிட்டது.


Simbu's Ithu Namma Aalu to release in April

இத்தனைக்கும் ராஜேந்தரின் சொந்தத் தயாரிப்பு. இடையில் பீப் சர்ச்சையில் சிக்கி சில மாதங்கள் தலைமறைவு வாழ்க்கையிலிருந்தார் சிம்பு. வழக்கு வாய்தாவெல்லாம் முடிந்து, அடுத்த படத்துக்கு சிம்பு தயாராகிவிட்டார்.


இப்போதுதான் இது நம்ம ஆளுக்கும் விடிவுகாலம் பிறந்திருக்கிறது. வரும் ஏப்ரல் 14-ம் தேதி அல்லது அதற்கடுத்த வாரத்தில் இது நம்ம ஆளு படத்தை வெளியிட்டுவிடலாம் என்று முடிவு செய்திருக்கிறார்களாம்.


தேனாண்டாள் வெளியீடாக வரவிருக்கும் இது நம்ம ஆளுக்கு, சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைத்துள்ளார். சிம்பு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

English summary
If all goes well, Simbu's Ithu Namma Aalu will release for Tamil New year.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil