சிம்பு அறிவித்த மாநாடு சக்சஸ் மீட் தள்ளிவைப்பு...இது தான் காரணமா ?
சென்னை : ஜனவரி 6 ம் தேதி நடத்தப்படுவதாக சிம்பு அறிவித்த மாநாடு படத்தின் சக்சஸ் மீட் தள்ளிவைக்கப்படுவதாக அகில இந்திய எஸ்டிஆர் தலைமை ரசிகர்கள் நற்பணி மன்றத்தின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
டைரக்டர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த படம் மாநாடு. பல தடைகளை தாண்டி நவம்பர் 25 ம் தேதி மாநாடு படம் தியேட்டர்களில் உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டது. அரசியல், த்ரில்லர், டைம் லூப் படமான மாநாடு படத்தில் சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பெரிய அளவில் பாராட்டை பெற்றதுடன், படத்தையும் பிளாக்பஸ்டர் படமாக்கியது.

மாநாடு சக்சஸ் மீட்
தமிழ் நாட்டில் மட்டுமின்றி மாநாடு படம் உலகம் முழுவதும் வெற்றி அடைந்தது. ரிலீஸ் ஆன முதல் நாளிலேயே ரூ.10 கோடியை இந்த படம் வசூல் செய்தது. 25 வது நாளில் 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்தது மாநாடு படம். இதைக் கொண்டாடும் விதமாக சென்னையில் சக்சஸ் மீட் நடத்தப்பட்டது. இதில் படத்தில் நடித்த பெரும்பாலானவர்கள் கலந்து கொண்டனர்.

சிம்புவை விமர்சித்த எஸ்ஏசி
ஆனால் ஹீரோவான சிம்பு மட்டும் கலந்து கொள்ளவில்லை. கெளதம் மேனன் இயக்கத்தில் அவர் நடித்து வரும் வெந்து தணிந்தது காடு படத்தின் இறுதிக்கட்ட ஷுட்டிங்கில் பிஸியாக இருப்பதால் சிம்புவால் பங்கேற்க முடியவில்லை என கூறப்பட்டது. இருந்தாலும் சிம்பு கலந்து கொள்ளாததை கடுமையாக கண்டித்து, அவரை விமர்சித்து விழா மேடையில் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியது பரபரப்பாக பேசப்பட்டது.
Recommended Video

தனியாக சக்சஸ் மீட்
மாநாடு சேட்டிலைட் உரிமத்தை அதிக விலைக்கு விற்றதுடன், அதன் பங்கை தரவில்லை என சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர், மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மீது வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த விவகாரத்தால் தான் மாநாடு சக்சஸ் மீட்டில் சிம்பு கலந்து கொள்ளவில்லை என்றும் வதந்திகள் பரவின. இதற்கிடையில் தனது தலைமையில் மாநாடு படத்தின் சக்சஸ் மீட் ஜனவரி 6 ம் தேதி நடைபெறும் என சிம்பு அறிவித்தார்.

ஒத்திவைப்பிற்கு இது தான் காரணமா
இதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் வேளையில், இந்த விழா ஒத்திவைக்கப்படுவதாக இன்று திடீரென அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அகில இந்திய எஸ்டிஆர் தலைமை ரசிகர்கள் நற்பணி மன்றத்தின் தலைவர் வாசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனவரி 6 ம் தேதி நடக்கவிருந்த மாநாடு படத்தின் வெற்றிவிழாவை ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் காரணத்தால் ரசிகர்களின் நலன் கருதி மாநாடு படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் தள்ளிவைக்கப்படுகிறது. அதிகாரபூர்வமான தேதி மீண்டும் அறிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











