»   »  சிம்பு-ஆதிக் ரவிச்சந்திரனின் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்'

சிம்பு-ஆதிக் ரவிச்சந்திரனின் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிம்பு-ஆதிக் ரவிச்சந்திரன் இணையும் புதிய படத்திற்கு 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' என்று பெயர் சூட்டியுள்ளனர்.

'திரிஷா இல்லேன்னா நயன்தாரா' புகழ் ஆதிக் ரவிச்சந்திரன் தன்னுடைய அடுத்த படத்தில் சிம்புவை இயக்குகிறார்.இப்படத்தின் மூலம் முதன்முறையாக சிம்பு-ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி இணைகின்றது.

கடந்த மாதம் இப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பை மே 1 ம் தேதி வெளியிடுவதாக இருவரும் கூறியிருந்தனர். இந்நிலையில் இப்படத்தின் தலைப்பை இன்று அறிவித்துள்ளனர்.

Simbu's next Movie Title Anbanavan Asaradhavan Adangadhavan

அதன்படி இப்படத்திற்கு 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' என்று பெயர் சூட்டியிருக்கின்றனர். முதன்முறையாக இப்படத்தில் சிம்பு 3 விதமான கெட்டப்புகளில் நடிப்பதால் அவரது ரசிகர்களுக்கு இப்படம் ஒரு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் இப்படத்தில் நடிக்கும் நடிக, நடிகையர் குறித்த விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர 'இது நம்ம ஆளு' படத்தின் வெளியீட்டுத் தேதியையும் இயக்குநர் பாண்டிராஜ் தற்போது உறுதி செய்திருக்கிறார்.

இதனால் சிம்பு ரசிகர்கள் தற்போது டபுள் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர்.

English summary
Simbu- Aadhik Ravichandran's next Movie Title now Revealed.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil