»   »  ஆமா... தப்பு பண்ணிட்டேன்.. மன்னிச்சிடுங்க! - சிம்பு

ஆமா... தப்பு பண்ணிட்டேன்.. மன்னிச்சிடுங்க! - சிம்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil
' என் எதிரி தனுஷோட ஃபர்ஸ்ட் ஷோ பார்த்தேன்...' - சிம்பு ஓப்பன் டாக்!- வீடியோ

அன்பானவன் அடங்காதவன் அசராதவன் பட விஷயத்தில் தவறு செய்துவிட்டேன். அதற்காக மன்னிப்பு கோருகிறேன் என்று நடிகர் சிம்பு பகிரங்கமாகப் பேசினார்.

மைக்கேல் ராயப்பன் தயாரித்த படம் அன்பானவன் அடங்காதவன் அசராதவன். இந்த படத்திற்கு சரியாக ஒத்துழைப்பு கொடுக்காமலும், கதையில் தலையிட்டும் சிம்பு ஏற்படுத்திய பிரச்சினையால் தனக்கு 20 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக மைக்கேல் ராயப்பன் புகார் கூறியிருந்தார். இதனால் தயாரிப்பாளர் சங்கம், சிம்புவுக்கு ரெட்கார்ட் விதிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சந்தானம் நடித்துள்ள சக்கபோடு போடு ராஜா படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. படத்துக்கு இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் சிம்பு. நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய சிம்பு, "அஅஅ பட விஷயத்தில் நான் தவறு செய்துவிட்டேன்," என்று கூறி மேடையிலேயே பகிரங்க மன்னிப்பு கேட்டார்.

தவறுதான்

தவறுதான்

அவர் மேலும் பேசுகையில், "எனக்கு மோசடி விளையாட்டு தெரியாது. ஆனால் எல்லோரும் என் மீது தவறு சொல்கிறார்கள். எதுவும் இல்லாமல் யாராவது சொல்வார்களா... என் மீதும் தவறு இருக்கிறது. ஒப்புக் கொள்கிறேன். ஏஏஏ படம் சரியா போகலதான். தோல்வி படம்தான் ஒத்துக்கிறேன். அது ரசிகர்களுக்காக ஜாலியாக பண்ணின படம். அதுக்காக நான் வருத்தப்படல. அடுத்தடுத்த படங்களில் சரியாகிடும்.

வருத்தம்

வருத்தம்

ஒரு பாகமாக முடிய வேண்டிய படம் சில காரணங்களால் ரெண்டு பாகமாயிடுச்சு. அதனால் கொஞ்சம் செலவானதால புரட்யூசருக்கு கொஞ்சம் மனக்கசப்பு இருந்தது. பிரச்னைகளை படம் நடக்கும்போது சொல்லியிருக்கலாம், அல்லது ரிலீசுக்கு பிறகு சொல்லியிருக்கலாம், ஒரு மாதம் கழித்து சொல்லியிருக்கலாம், 6 மாதத்திற்கு பிறகு யாரோ சொன்னார்கள் என்று சொல்வது தான் வருத்தமாக இருக்கிறது. அதையும் மீறி நான் தவறு செய்திருந்தால் இந்த மேடையில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

நல்லவன் இல்ல

நல்லவன் இல்ல

நான் நல்லவன் என்று எப்போதும் சொல்ல மாட்டேன். நான் என்ன தவறு பண்ணேன்னு எனக்குத் தெரியும். கொஞ்சம் தப்பாயிடுச்சு, பரவாயில்லை. நான் இனிமே நடிக்க முடியாது என்றெல்லாம் சொல்கிறார்கள். எனக்கு அது பற்றித் தெரியவில்லை.

மணிரத்னம் நம்பிக்கை

மணிரத்னம் நம்பிக்கை

மணிரத்னம் என்னை நடிக்க கூப்பிட்டிருக்கிறார். எந்த நம்பிக்கையில் கூப்பிடுகிறார் என்று தெரியவில்லை. அதில் நடிக்க ஆர்வமாகத்தான் இருக்கிறேன். ஒருவேளை நடிக்க முடிலேன்னா பரவாயில்லை, வேறு ஏதாவது செய்துவிட்டுப் போகிறேன். நான் நடிப்பது நிச்சயம் எனக்காக இல்லை. என் ரசிகர்களை சந்தோஷப்படுத்தத்தான்.

சேவை

சேவை

நடிக்க முடிலேன்னா அவர்களுக்கு சேவை செய்து விட்டுப்போகிறேன். நடிப்பதை தடுக்கலாம் ஆனால் நான் மக்களுக்கு சேவை செய்வதை எவனாலும் தடுக்க முடியாது. வேறு மொழிகளில் நடிப்பேன். ஏதோ ஒரு வழியில் ரசிகர்களை சந்தோஷப்படுத்துவேன். நான் ஏன் இப்படி இருக்கேன் என்று இப்போது கண்டுபிடித்திருக்கிறேன்," என்றார்.

அவர் பேச்சுக்கு பார்வையாளர் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

English summary
Actor Simbu has confessed his mistakes at Sakka Podu Podu Raja audio launch

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil