சிம்பு ரசிகர்களுக்கு காத்திருக்கும் தீபாவளி பரிசு… பத்து தல ஷுட்டிங் அப்டேட் சொன்ன டைரக்டர்
பெல்லாரி: மாநாடு படத்தை தொடர்ந்து சிம்பு நடிப்பில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியானது.
கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு சூப்பர் ஹிட் அடித்தது.
இதனையடுத்து சிம்பு நடித்து வரும் பத்து தல படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு குறித்து இயக்குநர் அப்டேட் கொடுத்துள்ளார்.

அதிரடி காட்டும் சிம்பு
தமிழ்த் திரையுலகில் திறமையான நடிகரான சிம்பு, படப்பிடிப்புகளுக்கு சரியாக வருவதில்லை என அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம். ஆனால் அதையெல்லாம் பொய்யாக்கும் விதமாக வெங்கட் பிரபுவுடன் இணைந்து 'மாநாடு' படத்தில் மாஸ் ஹிட் கொடுத்தார். டைம் லூப்பில் சிக்கிக் கொண்டு தவித்த சிம்பு, வசூலிலும் வேற லெவலில் சம்பவம் செய்தார். அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் வெளியான சிம்புவின் வெந்து தணிந்தது காடு படமும் தரமான சம்பவம் செய்தது.

கேங்ஸ்டர் முத்து வீரன்
சிம்பு ஆத்மனாக மாறிய பிறகுதான் 'மாநாடு' ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்ததாக சொல்லப்படுகிறது. இப்போது வெந்து தணிந்தது காடு திரைப்படமும் சிம்புவிற்கு நல்ல கம்பேக் கொடுத்துள்ளது. முத்துவீரன் என்ற கேங்ஸ்டர் ரோலில் சிம்பு சைலண்டாக ஆக்சன் ட்ரீட் கொடுத்தார். சிம்பு, கெளதம், ஏ.ஆர். ரஹ்மான் காம்போ ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், சிம்பு இப்போது பத்து தல படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

பரபரக்கும் பத்து தல
கன்னடத்தில் வெற்றிப் பெற்ற மஃப்டி படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் பத்து தல படத்தை, 'சில்லுன்னு ஒரு காதல்' கிருஷ்ணா இயக்கி வருகிறார். சிம்பு,வுடன் கெளதம் கார்த்திக், கலையரசன், பிரியா பவானி சங்கர் ஆகியோரும் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகின்றனர். 'பத்து தல' படத்தில் ஏ.ஜி.ஆர் என்ற கேங்ஸ்டராக சிம்பு நடித்து வருவதால், அவரது ரசிகர்கள் மரண வெயிட்டிங்கில் உள்ளனர். ஏற்கனவே இப்போது தான் வெந்து தணிந்தது காடு படத்தில் முத்து என்ற கேங்ஸ்டர் ரோலில் அதகளம் செய்திருந்தார்.

தீபாவளிக்கு டீசர்?
'பத்து தல' படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வருவது, பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், வெந்து தணிந்தது காடு ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்காக சிம்பு படப்பிடிப்பில் பங்கேற்காமல் இருந்தார். இந்நிலையில், இன்றுமுதல் மீண்டும் பத்து தல ஷூட்டிங் தொடங்கியுள்ளது. கர்நாடக மாநிலம் பெல்லாரியில் இன்று ஷூட்டிங் தொடங்கியதை இயக்குநர் கிருஷ்ணா உறுதி செய்துள்ளார். தொடர்ந்து 30 நாட்கள் ஷூட்டிங் நடைபெறவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. பத்து தல திரைப்படம் டிசம்பர் 14ம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில், டீசர் தீபாவளிக்கு வெளீயாகும் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.


Click it and Unblock the Notifications











