Don't Miss!
- Finance
பட்ஜெட்டில் வெளியான 5 முக்கிய வருமான வரி மாற்றங்கள்.. சம்பளதாரர்களுக்கு பயனளிக்குமா?
- News
"பாஜக போட்டியிட்டால் நீங்களும் வாபஸா?".. செய்தியாளர் கேட்டதும் ஜெயக்குமார் தந்த பதிலை பாருங்க
- Automobiles
எல்லாரும் வாங்க கூடிய விலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! வர்ற 9ம் தேதி பெட்ரோல் வண்டிகளுக்கு எல்லாம் ஆப்பு!
- Lifestyle
தட்டுக்கடை முட்டை பிரியாணி செய்வது எப்படி தெரியுமா?
- Sports
ஆட்டத்தை மாற்றியது சுப்மன் கில் அல்ல.. சூர்யகுமாரின் அந்த செயல் தான்.. அதிர்ச்சி அடைந்த நியூசி வீரர்
- Technology
புது போன், Smart TV வாங்குற ஐடியா இருக்கா? 2024-க்குள் வாங்கிடுங்க.! நிர்மலா சீதாராமனே சொல்லிட்டாங்க.!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
நிறைவடைந்த சிம்புவின் பத்து தல படத்தின் சூட்டிங்.. அடுத்த அப்டேட்டை வெளியிடும் படக்குழு!
சென்னை : நடிகர் சிம்புவின் அடுத்தடுத்த படங்கள் வெளியாகி வெற்றியடைந்துள்ள நிலையில் அடுத்ததாக அவரது பத்து தல படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில், சமீபத்தில் படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினார் சிம்பு.
இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில், வரும் டிசம்பர் மாதத்தில் இந்தப் படம் ரிலீசாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரெட் ஜெயன்ட் தலைவர், என் அன்புத் தம்பி…: அடுக்கு மொழியில் உதயநிதிக்கு வாழ்த்து சொன்ன கமல்ஹாசன்!

நடிகர் சிம்புவின் படங்கள்
நடிகர் சிம்புவின் மாநாடு, வெந்து தணிந்தது காடு போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இந்தப் படங்கள் சிறப்பான வெற்றியை கொடுத்துள்ளதுடன் சிம்புவின் மெச்சூர்டான நடிப்பிற்கும் எடுத்துக்காட்டுக்களாக அமைந்துள்ளன. வெங்கட் பிரபு மற்றும் கௌதம் மேனன் என முன்னணி இயக்குநர்களின் இயக்கத்தில் இந்தப் படங்களில் நடித்திருந்தார் சிம்பு.

நிறைவடைந்த பத்துல தல படத்தின் சூட்டிங்
இந்தப் படங்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது பத்து தல படத்தில் நடித்து முடித்துள்ளார் சிம்பு. இந்தப் படத்தின் சூட்டிங் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. இதையொட்டி படக்குழுவினருடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார் நடிகர் சிம்பு. இந்தக் கொண்டாட்டத்தின் போது படக்குழுவினர் சிம்புவிற்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தனர்.

அடுத்த வாரத்தில் ரிலீஸ் தேதி அறிவிப்பு
இந்தப் படம் டிசம்பரில் வெளியாக உள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் வெளிநாட்டு பயணத்தில் சிம்பு ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக படத்தின் ப்ரமோஷனில் ஈடுபடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகர்களுடன் சந்திப்பு
முன்னதாக மாநாடு மற்றும் வெந்து தணிந்தது காடு படங்களின் ரிலீசுக்கு முன்னதாக ரசிகர்களை சந்திக்க உள்ளதாக சிம்பு தெரிவித்திருந்த நிலையில், தற்போது பத்து தல படத்தின் ரிலீசுக்கு முன்னதாக அவர் ரசிகர்களை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ளதால் தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

அடுத்த வாரத்தில் ரிலீஸ் தேதி
இதனிடையே இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் அடுத்த வாரத்தில் வெளியாகவுள்ளதாக படக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதையொட்டி இதற்கான பணிகளில் தற்போது படக்குழு ஈடுபட்டுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஏஆர் முருகதாஸ் அல்லது சுதா கொங்கராவுடன் இணைந்து புதிய படத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

சிம்புவின் சிறப்பான படங்கள்
தொடர்ந்து அடுத்தடுத்த சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார் சிம்பு. அவரது படத்தேர்வுகளில் முதிர்ச்சி காணப்படுகிறது. நடிப்பிலும் அது பிரதிபலித்து வருகிறது. இதனிடையே முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து சிம்பு படங்களை கொடுத்து வருகிறார். ஏஆர் முருகதாசுடன் இணைந்து அவர் சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட்டில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.