சோலோவாக களமிறங்கும் சிம்புவின் பத்து தல...சூப்பரான ரிலீஸ் அப்டேட் வந்தாச்சு
சென்னை : மாநாடு படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கும் பிறகு தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் ஹீரோவாகி விட்டார் சிம்பு. இதனால் இவர் அடுத்தடுத்து நடிக்கும் படங்களின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சிம்பு தற்போது கெளதம் மேனன் இயக்கும் வெந்து தணிந்தது காடு, சில்லுன்னு ஒரு காதல், நெடுஞ்சாலை படங்களை இயக்கிய ஒபிலி என்.கிருஷ்ணா இயக்கும் பத்து தல ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இதில் வெந்து தணிந்தது காடு படத்தின் ஷுட்டிங் முடிந்து, போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடந்து நடந்து வருகிறது. இந்த படத்தை ஐசரி கணேஷனில் வேல்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளது. ஆகஸ்ட் 18 ம் தேதி இந்த படம் ரிலீசாக உள்ளது.

கன்னட ரீமேக் படத்தில் சிம்பு
ஒபிலி என்.கிருஷ்ணா இயக்கி வரும் பத்து தல படம், கன்னடத்தில் வெளியான பிளாக்பஸ்டர் படமான முஃப்தி படத்தின் தமிழ் ரீமேக்காகும். இந்த படத்தில் கெளதம் கார்த்திக்கும் மற்றொரு லீட் ரோலில் நடித்து வருகிறார். கேங்ஸ்டர் ரோலில் சிம்புவும், அவரை பிடிக்க போராடும் போலீசாக கெளதம் கார்த்திக்கும் நடித்து வருகின்றனர். தனது ரோலுக்காக மீண்டும் உடல் எடையை கூட்டி உள்ளார் சிம்பு.

ஷுட்டிங்கை நிறுத்திய சிம்பு
இந்த படத்தில் சிம்பு நடிக்க வேண்டிய பகுதிகள் மட்டும் தான் மீதம் உள்ளதாகவும், மற்ற நடிகர், நடிகைகள் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. வெந்து தணிந்தது காடு படம் முடிந்ததும் மே மாதத்தில் பத்துதல படத்தின் ஷுட்டிங்கை துவக்க சிம்பு திட்டமிட்டிருந்தார். ஆனால் அதற்குள் அவரின் அப்பா டி.ராஜேந்தருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டதால், ஷுட்டிங் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்கா பறந்த சிம்பு
டி.ராஜேந்தரின் மேல் சிகிச்சைக்காக சிம்பு தற்போது அமெரிக்கா சென்றுள்ளார். அப்பாவின் ட்ரீட்மென்ட் முடிந்த பிறகு தான் ஷுட்டிங்கை மீண்டும் துவங்க உள்ளதாக சிம்பு கூறி விட்டாராம். இதனால் சிம்பு வருவதற்காக படக்குழு காத்துக் கொண்டிருக்கிறதாம்.

அடுத்து பத்து தல ஷுட்டிங் எப்போ
லேட்டஸ்ட் தகவலின் படி, ஜுலை மாதத்தில் சிம்பு, அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்ததும், பத்து தல படத்தின் ஷுட்டிங் மீண்டும் துவங்கப்பட உள்ளதாம். இது தான் பத்துதல படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பாம். இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஜுலை 15 ம் தேதி துவங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பத்து தல ரிலீஸ் அப்டேட் வந்தாச்சு
இந்த இறுதிக்கட்ட படப்பிடிப்பு 45 நாட்கள் வரை நடத்தப்பட உள்ளதாம். ஆகஸ்ட் மாதத்தில் பத்துதல படத்தின் ஷுட்டிங்கை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். ஆகஸ்ட் மாத இறுதி முதல் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடைபெற உள்ளதாம். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் மாதம் பத்துதல படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முதல் முறையாக சிம்புவிற்கு ஜோடி
பத்துதல படத்தில் முதல் முறையாக சிம்புவிற்கு ஜோடியாக பிரியா பவானிசங்கர் நடித்துள்ளார். இவர்களுடன் மெட்ராஸ் படத்தில் நடித்த கலையரசன், மனுஷிய புத்திரன், அசுரன் படத்தில் நடித்த தீஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது.


Click it and Unblock the Notifications











