’பத்து தல’ பாம்பா வந்த சிம்பு.. டிரெண்டிங்கை சும்மா தீயா தெறிக்கவிடுறாரே.. சூட்டிங் ஸ்பாட் பிக்ஸ்!
சென்னை: வெந்து தணிந்தது காடு படம் வெளியான பிறகு தீவிரமாக பத்து தல படத்தின் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் சிம்பு.
இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் பத்து தல படத்தின் சூட்டிங்கில் சிம்பு கலந்து கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
#PathuThala என்கிற ஹாஷ்டேக் உடன் காலையில் இருந்து சிம்பு ரசிகர்கல் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

பத்து தல பாம்பா
இயக்குநர் கெளதம் மேனனின் வெந்து தணிந்தது காடு படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் இடம்பெற்ற மல்லிப்பூ பாடலில் வரும் பத்து தல பாம்பா வந்து முத்தம் தரப் போறேன் என்கிற பாடல் வரிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. அதற்கு காரணம் சிம்பு நடிப்பில் அடுத்து உருவாகி வரும் படத்தின் டைட்டிலே 'பத்து தல' என்பது தான்.

எக்ஸ்க்ளூசிவ் பிக்ஸ்
சில்லுனு ஒரு காதல் படத்தை எடுத்து சூப்பர் ஹிட் கொடுத்த இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் பத்து தல. கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியான மஃப்டி படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் இந்த படம். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கர்நாடகாவில் நடைபெற்று வரும் நிலையில், சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியான எக்ஸ்க்ளூசிவ் பிக்ஸ் இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது.

டிரெண்டிங் கிங்
சிம்பு ரசிகர்கள் மற்ற நேரங்களில் ஸ்லீப்பர் செல்களாக சைலன்ட்டாக இருப்பார்கள். பெரிய அப்டேட் கேட்டு அலப்பறை எல்லாம் செய்ய மாட்டார்கள். ஆனால், அதிகாரப்பூர்வமாக சிம்பு படம் வெளியானாலோ, ஒரு புதிய புகைப்படம் வெளியானாலோ பெரும் படையாக வந்து ஹாஷ்டேக் போட்டு கெத்து காட்டி விடுவார்கள். தற்போது #PathuThala காலையிலிருந்து டிரெண்டாகி வருகிறது.

குழந்தைகள் பெண்களுடன்
கெளதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். சூட்டிங் ஸ்பாட்டுக்கு விசிட் செய்த குழந்தைகள் மற்றும் பெண்களுடன் நடிகர் சிம்பு எடுத்துக் கொண்ட க்யூட் போட்டோவும் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

வெயிட்டான ரோல்
பத்து தல படத்தில் ஏஜிஆர் எனும் வெயிட்டான டான் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து வருகிறார். வெந்து தணிந்தது காடு படத்தின் கிளைமேக்ஸில் சிம்பு வரும் அதே கெட்டப் உடன் தான் இந்த படத்திலும் தாடி, நீண்ட முடியுடன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் டிசம்பர் மாதம் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இன்னமும் படப்பிடிப்பு முடியாத நிலையில், அடுத்த ஆண்டுக்கு தள்ளிப் போகுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











