பத்து தல அடுத்த ஷுட்டிங் எப்போ?...சிம்புவின் பக்கா பிளான்

சென்னை : மாநாடு படத்தின் பிரம்மாண்ட வெற்றி கொடுத்த உற்சாகத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து முடித்துள்ளார் சிம்பு. இந்த படம் செப்டம்பர் 15 ம் தேதி ரிலீசாக உள்ளது.

இதைத் தொடர்ந்து பத்து தல படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் சிம்பு. ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக உள்ள பத்து தல படத்தில் சிம்பு, தாதா ரோலில் நடித்துள்ளார். இதற்காக மீண்டும் கொஞ்சம் வெயிட் போட்டுள்ளார்.

குண்டான உடம்பு, வேஷ்டி சட்டை, நீண்ட தாடி, நீண்ட தலைமுடி, முறுக்கி விட்ட மீசை என வித்தியாசமான லுக்கிற்கு மாறி உள்ள சிம்பு, மற்ற படங்களின் வேலைகளிலும் பிஸியாக இருந்து வருகிறார்.

 விறுவிறுப்பான பத்து தல ஷுட்டிங்

விறுவிறுப்பான பத்து தல ஷுட்டிங்

தனது அப்பா டி.ராஜேந்தரின் சிகிச்சைக்காக சிம்பு அமெரிக்கா சென்றதால் பத்து தல படத்தின் ஷுட்டிங் ஒரு மாத காலம் நிறுத்தப்பட்டிருந்தது. சிம்பு இந்தியா திரும்பியதும் மைசூரின் பெல்லாரி பகுதியில் மிக சில நாட்கள் மட்டுமே ஷூட்டிங் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து சென்னையில் இந்த படத்தின் ஷுட்டிங் நடத்தி முடிக்கப்பட்டது.

அடுத்த ஷுட்டிங் எப்போ

அடுத்த ஷுட்டிங் எப்போ

இந்நிலையில் லேட்டஸ்ட் அப்டேட்டாக பத்து தல படத்தின் ஷுட்டிங் இன்று காரைக்குடியில் துவங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் சிம்பு, தீஜே நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

சிம்புவின் செம பிளான்

சிம்புவின் செம பிளான்

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா செப்டம்பர் 2 ம் தேதி வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதில் கலந்து கொள்ள சிம்பு சென்னை வர உள்ளார்.

கொஞ்சம் கூட கேப் கிடையாதா

கொஞ்சம் கூட கேப் கிடையாதா

இதனால் காரைக்குடியில் இன்று துவங்கி 4 நாட்கள் மட்டுமே ஷுட்டிங் நடத்தப்பட உள்ளது. 4 நாட்கள் ஷுட்டிங் முடிந்த அடுத்த நாளே சென்னை வந்து வெந்து தணிந்தது காடு படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொள்ள உள்ளார். அதைத் தொடர்ந்து பத்து தல படத்தின் அடுத்த கட்ட ஷுட்டிங் துவங்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

விரைவில் அப்டேட் எதிர்பார்க்கலாம்

விரைவில் அப்டேட் எதிர்பார்க்கலாம்

பத்து தல படத்தின் ஷுட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி வருவதாகவும், இன்னும் ஒரு கட்ட ஷுட்டிங் மட்டுமே மீதம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.இதனால் விரைவில் பத்து தல படத்தின் அப்டேட்களும் வர துவங்கும். படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X