»   »  மார்ச் 27-ல் வாலு ரிலீஸ்... மகளிர் தினத்தன்று அம்மாவுக்கு படத்தைப் போட்டுக் காட்டிய சிம்பு!

மார்ச் 27-ல் வாலு ரிலீஸ்... மகளிர் தினத்தன்று அம்மாவுக்கு படத்தைப் போட்டுக் காட்டிய சிம்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மகளிர் தினமான நேற்று தான் நடித்து 3 ஆண்டுளாக கிடப்பிலிருந்த வாலு படத்தை தன் அம்மா உஷாவுக்கு திரையிட்டுக் காட்டினார் சிம்பு.

படம் பார்த்த உஷா, மிகவும் சிறப்பாக வந்திருப்பதாக மகனைப் பாராட்டினார்.

சிம்பு - ஹன்சிகா

சிம்பு - ஹன்சிகா

வாலு படத்தை விஜய் சந்தர் இயக்கியுள்ளார். விஜய் - ஹன்சிகா முதல் முறையாக ஜோடி சேர்ந்த படம் இது. இந்தப் படத்தின் போதுதான் இருவருக்கும் காதல் வந்தது. முறிவும் ஏற்பட்டது.

மார்ச் 27

மார்ச் 27

இந்தப் படம் பல்வேறு காரணங்களால் ரிலீஸ் ஆகாமல் இழுத்துக் கொண்டே இருந்தது. ஒருவழியாக வரும் மார்ச் 27-ம் தேதி படத்தை வெளியிடுவது என்று முடிவு செய்துள்ளனர். படத்தை அடுத்த வாரம் சென்சாருக்கு அனுப்ப உள்ளனர்.

அம்மாவுக்கு...

அம்மாவுக்கு...

இந்த நிலையில் மகளிர் தினமான நேற்று படத்தை தன் அம்மா உஷா ராஜேந்தருக்கு போட்டுக் காட்டினார் சிம்பு. சென்னையில் உள்ள ஒரு ப்ரிவியூ அரங்கில் இந்தக் காட்சி நடந்தது. உடன் சிம்புவின் நண்பர்களும் படம் பார்த்தனர்.

பாராட்டு

பாராட்டு

இதுகுறித்து சிம்பு கூறுகையில், "என் அம்மாதான் எனது மிகச் சிறந்த விமர்சகர். எதிலும் அத்தனை சீக்கிரம் திருப்தியடைய மாட்டார். ஆனால் இந்தப் படம் பார்த்து மிகவும் உணர்ச்சிவசப்பட்டு என்னை கட்டித் தழுவிப் பாராட்டினார். படம் நன்றாக வந்திருக்கிறது என்றார். இது எனக்கு பெரிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது," என்றார்.

சந்தானம்

சந்தானம்

வாலு படத்தில் சந்தானம் படம் முழுக்க வருகிறாராம். சந்தானம் - சிம்பு காமெடி சிறப்பாக வந்துள்ளதாம்.

சரோஜா தேவி, குஷ்பு

சரோஜா தேவி, குஷ்பு

படத்தின் இன்னொரு ஹைலைட், எம்ஜிஆர், ரஜினி கெட்டப்புகளில் சிம்பு தோன்ற, அவருடன் ஆட்டம் போடுகிறார்களாம் சரோஜா தேவி, குஷ்பு உள்ளிட்டோர்.

English summary
Simbu's much-delayed Vaalu which had few postponements in release date is finally going to open big on March 27 worldwide.
Please Wait while comments are loading...