Don't Miss!
- News
அடேங்கப்பா.. "ட்விஸ்ட்டு".. எடப்பாடி பல்டி.. அண்ணாமலைக்கு போன் போட்ட சீனியர்கள்.. காத்து திரும்புதே!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அடுத்த மாஸ் ரெடி...வெளியானது சிம்புவின் வெந்து தணிந்தது காடு டீசர் ரிலீஸ் தேதி
சென்னை : சிம்பு நடித்த அரசியல், சையின்ஸ் ஃபிக்சர் த்ரில்லங் படமான மாநாடு நவம்பர் 25 ம் தேதி ரிலீசாக உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வெங்கட் பிரபு இயக்கி உள்ள இந்த படம் பிளாக்பஸ்டர் படமாக அமைந்து, சிம்புவிற்கு மற்றொரு கம் பேக்காக அமைந்துள்ளது.
மாநாடு படத்திற்கு சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு படத்திற்கு மிகப் பெரிய வெற்றியை தேடித் தந்துள்ளது. இந்த படம் ரிலீசான முதல் வாரத்திலேயே ரூ.40 கோடி வசூலை கடந்துள்ளது. இதனால் சிம்பு நடிக்கும் அடுத்தடுத்த படங்களின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஷிவானி
நாராயணன்
வாழ்க்கையில்
இணைந்த
புதிய
உறவு..
கையில்
வோட்காவுடன்
என்ன
ஒரு
போஸ்!

ஸ்லிம்மான சிம்பு
மாநாடு படத்தை தொடர்ந்து சிம்பு நடிக்கும் படம் வெந்து தணிந்தது காடு. விண்ணை தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களைத் தொடர்ந்து டைரக்டர் கெளதம் மேனனுடன் சிம்பு மீண்டும் இணைந்துள்ள படம் இது. இந்த படத்திற்காக அடையாளமே தெரியாத அளவிற்கு உடல் எடையை குறைத்துள்ளார் சிம்பு.

மூன்றாவது முறையாக கூட்டணி
இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஜெயமோகன் வசனங்கள் எழுதி உள்ளார். சிம்பு, கெளதம் மேனன், ஏ.ஆர்.ரஹ்மான், தாமரை ஆகியோரின் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம் இது.

இறுதிக் கட்ட ஷுட்டிங்
வெந்து தணிந்தது காடு படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் மும்பையில் நடத்தப்பட உள்ளது. இது தான் படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பாம். இந்த படப்பிடிப்பை 25 நாட்களுக்கும் மேல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது முடிந்ததும் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் துவக்கப்பட உள்ளதாம்.

டீசர் ரிலீஸ் எப்போ
லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால், சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் டீசர் அடுத்த வாரம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாம். படத்தின் 80 சதவீதம் ஷுட்டிங் நிறைவடைந்து விட்டதாம். ஒட்டுமொத்த ஷுட்டிங்கையும் ஜனவரி மாத துவக்கத்திற்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

மார்ச் மாத வெளியீடு
கன்னட நடிகை காயடு லோகர் லீட் ரோலிலும், மலையாள நடிகர் நீரஜ் மாதவ் வில்லன் ரோலிலும் நடிக்கிறார்கள். ராதிகா சரத்குமார், சிம்புவின் அம்மா ரோலில் நடித்துள்ளார். வெந்து தணிந்தது காடு படத்தை 2022 ம் ஆண்டு மார்ச் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.