twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொல மாஸ்...சாம்பிளே இப்படியா?...சிம்பு பட ஆடியோ விழாவிற்காக வேற லெவலில் போடப்பட்டுள்ள செட்

    |

    சென்னை : விண்ணை தாண்டி வருவாயா, செக்க சிவந்த வானம், அச்சம் என்பது மடையடா படங்களைத் தொடர்ந்து டைரக்டர் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு தற்போது நான்காவது முறையாக இணைந்துள்ள படம் வெந்து தணிந்தது காடு.

    ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தை ஐசரி கணேசனின் வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. சிம்பு, சித்தி இத்னானி, ராதிகா ரத்குமார், சித்திக், நீரஜ் மாதவ் உள்ளிட்டோர் நடித்துள்ள நடத்துள்ள படம்.

    செப்டம்பர் 15 ம் தேதி வெந்து தணிந்தது காடு படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தின் தமிழ் வெளியீட்டு உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றி உள்ளது.

     'ஜெயிலர்' படப்பிடிப்பு இன்று தொடக்கம்.. கண்ணாடி அணிந்து வயதான தோற்றத்தில் ரஜினி! 'ஜெயிலர்' படப்பிடிப்பு இன்று தொடக்கம்.. கண்ணாடி அணிந்து வயதான தோற்றத்தில் ரஜினி!

    வெந்து தணிந்தது காடு

    வெந்து தணிந்தது காடு

    திருச்செந்தூர், சென்னை, மும்பை உள்ளிட்ட இடங்களில் ஷுட்டிங் நடத்தப்பட்ட இந்த படத்தில் சிம்பு, முத்து என்ற கேரக்டரில் நடித்துள்ளார். ஹீரோயின் சித்தி இத்னானி, பாவை என்ற கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர், டீசர், பாடல்கள் என அனைத்தும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

    ரிலீசிற்கு வேகமாக தயாராகிறது

    ரிலீசிற்கு வேகமாக தயாராகிறது

    வெந்து தணிந்தது காடு படத்தில் டிஜிட்டல் வெளியீட்டு உரிமத்தை முதலில் ஆஹா தமிழ் பெற்றிருப்பதாக சொல்லப்பட்ட நிலையில் பிறகு, அமேசான் பிரைம் வீடியோ வாங்கி உள்ளதாக சொல்லப்பட்டது. சமீபத்தில் வெந்து தணிந்தது காடு படத்தின் டப்பிங் பணிகள் முடிந்ததாக அப்டேட் வெளியிடப்பட்டது.இதனால் படத்தின் ரிலீசிற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    டிரைலர் வெளியீட்டு விழா

    டிரைலர் வெளியீட்டு விழா

    சிம்புவை கிராமம், நகரம் என இரு வேறு கேட்அப்களில் பார்க்க ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் படம் பற்றிய புதிய அசத்தல் அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. வெந்து தணிந்தது காடு படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா செப்டம்பர்2 ம் தேதி மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளது.

    இசைப்புயலின் கச்சேரியும் இருக்கு

    இசைப்புயலின் கச்சேரியும் இருக்கு

    பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் மாலை 5 மணிக்கு இந்த விழா நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் லைவ் இசைக் கச்சேரியுடன் மிக பிரம்மாண்டமாக இந்த விழாவை நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த அறிவிப்பை படக்குழு சமீபத்தில் புதிய வீடியோவுடன் வெளியிட்டுள்ளது.

    ஆடியோ விழாவிற்கு இப்படி ஒரு ஏற்பாடா?

    ஆடியோ விழாவிற்கு இப்படி ஒரு ஏற்பாடா?

    இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்காக போடப்பட்டுள்ள பிரம்மாண்ட செட்டின் போட்டோக்களை வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. பெரிய கோட்டை வடிவில் அலங்கரிக்கப்பட்டுள்ள மேடை அனைவரையும் பிரம்மிக்க வைத்துள்ளது. இது சும்மா சாம்பிள் தான்...இதுவரை யாரும் நடத்தாத அளவிற்கு பிரம்மாண்ட ஆடியோ விழாவை நேரில் வந்து காண தவறாதீர்கள் என்ற கேப்ஷனுடன் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

    English summary
    Silambarasan's Vendhu thanindhadhu kaadu movie audio and trailer launch event will be on September 2nd, 5 pm in Vels University, Pallavaram in a grand manner. This event will conduct with A.R.Rahman's live music concert.Photos of set for this event was released by movie makers.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X