என்ன பாலா பட ஹீரோவா மாறிட்டாரு.. அடையாளமே தெரியலயே சிம்பு.. பாரதியார் பாடல் தான் டைட்டில்!

சென்னை: கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள புதிய படத்திற்கு நதிகளிலே நீராடும் சூரியன் என படு ரொமான்ட்டிக்கான டைட்டில் வைக்கப்பட்டு இருந்தது.

Recommended Video

STR என்ன பாலா பட HEROவா மாறிட்டாரு! அடையாளமே தெரியலயே Simbu | Oneindia Tamil

இந்நிலையில், தற்போது அந்த படத்திற்கு திடீரென அதிரடியாக பெயர் மாற்றம் நிகழ்ந்து, அனைவரும் ஆச்சர்யப்படும் அளவுக்கு ஆளே மாறிய சிம்புவின் புதிய கெட்டப் மற்றும் டைட்டிலை படக்குழு வெளியிட்டு இருக்கிறது.

நடிகர் சிம்புவே தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்

செம கூட்டணி

செம கூட்டணி

இயக்குநர் சிம்பு மற்றும் கெளதம் மேனன் கூட்டணி தமிழ் சினிமாவில் வெற்றி கூட்டணியாகவே பார்க்கப்படுகிறது. கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா நடித்த விண்ணைத் தாண்டி வருவாயா படம் மிகப்பெரிய வெற்றியை நடிகர் சிம்புவுக்கு கொடுத்தது. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான அத்தனை பாடல்களும் வேற லெவல் ஹிட் அடித்தன.

ரொமான்டிக் இயக்குநர்

ரொமான்டிக் இயக்குநர்

இயக்குநர் கெளதம் மேனனை ரொமான்டிக் இயக்குநர் என கன்ஃபார்ம் பண்ணதும் அந்த படம் தான். விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் கிரேஸ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் இளைஞர்கள் மத்தியிலும் பத்து ஆண்டுகளை கடந்து இன்னமும் நீடித்து இருக்கிறது.

அச்சம் என்பது மடமையடா

அச்சம் என்பது மடமையடா

சற்றென்று மாறுது வானிலை என பாடல் தலைப்பையே அச்சம் என்பது மடமையடா படத்திற்கு முதன் முதலாக வைத்திருந்தார் இயக்குநர் கெளதம் மேனன். ஆனால், அதே பெயரில் வேறு ஒரு படம் ரிஜிஸ்டர் செய்த நிலையில், அச்சம் என்பது மடமையடா எனும் எம்ஜிஆர் பட பாடல் தலைப்பை வைத்திருந்தார்.

இசைப்புயல் கூட்டணி

இசைப்புயல் கூட்டணி

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தை தொடர்ந்து மீண்டும் கெளதம் மேனன் மற்றும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் உடன் இணைந்து சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. காட் ஃபாதர் படத்தின் பாதிப்பால் இந்த படம் உருவாக்கப்பட்டது என அறிவித்த இயக்குநர் கெளதம் மேனன் படத்தை வெளியிட்டு இருந்தார். தள்ளிப் போகாதே பாடலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

மூன்றாவது முறையாக

மூன்றாவது முறையாக

இந்நிலையில், கெளதம் மேனன் - சிம்பு - ஏ.ஆர். ரஹ்மான் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். இவர்கள் கூட்டணி உருவான நிலையிலே படத்தின் வெற்றி முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. படத்திற்கு முதலில் காக்க காக்க பட பாடலில் வரும் நதிகளிலே நீராடும் சூரியன் என வித்தியாசமான டைட்டில் வைக்கப்பட்டு இருந்தது.

பாரதியார் பாடல்

பாரதியார் பாடல்

இந்நிலையில், அந்த டைட்டிலுக்கு என்ன பிரச்சனை வந்தது என்று தெரியவில்லை. திடீரென தற்போது பாரதியார் பாடல் வரியான வெந்து தணிந்தது காடு என்பதை டைட்டிலாக சிம்பு படத்திற்கு இயக்குநர் கெளதம் மேனன் வைத்து தமிழ் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார்.

தமிழ் தலைப்பு

தமிழ் தலைப்பு

சமீப காலமாக தமிழ் சினிமாவில் தமிழ் தலைப்புகளே அரிதாக இருக்கும் நிலையில், பாரதியார் பாடல் வரிகள் தலைப்பாக இடம்பெற்று இருப்பது நல்ல நடைமுறையாகவே பார்க்கப்படுகிறது. அதற்கு பாராட்டுக்களும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் குவிந்து வருகின்றன.

சிம்புவா இது

சிம்புவா இது

வெந்து தணிந்தது காடு என்கிற படத்தின் டைட்டிலுடன் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாகி இருக்கிறது. அதில் ஆளே அடையாளம் தெரியாத நிலையில் இருக்கும் சிம்புவை பார்த்த பலரும் உண்மையிலேயே இது சிம்பு தானா என ஜூம் செய்தெல்லாம் பார்த்து வருகின்றனர். அந்த அளவுக்கு படு வித்தியாசமாக மாறியுள்ளார் சிம்பு.

பாலா பட ஹீரோ

பாலா பட ஹீரோ

ஹுபர் கூல் ஹீரோவாக படு ரொமான்டிக் ஸ்டைலில் நடிகர்களை காட்டும் கெளதம் மேனன் இப்படியொரு லுக்கில் நடிகர் சிலம்பரசனை காட்டி இருப்பதை பார்த்து பலரும் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர். சிலர் வேற லெவலில் இந்த ஃபர்ஸ்ட் லுக்கை வச்சு செய்து வருகின்றனர். குறிப்பாக பாலா பட ஹீரோ போல இருக்காரு சிம்பு எனும் கமெண்ட் செம ஹைலைட்டாக வைரலாகி வருகிறது.

சம்பவம் இருக்கு

சம்பவம் இருக்கு

சார்பட்டா பரம்பரை படம் போல இந்த படமும் வித்தியாசமான முயற்சியாக இருக்கும் என்றும் நடிகர் சிலம்பரசனுக்கு நிச்சயம் மிகப்பெரிய வெற்றியை இந்த படம் கொடுக்கும் என்றும் சிம்பு ரசிகர்கள் ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

அஜித் ரசிகர்கள் ஆதரவு

அஜித் ரசிகர்கள் ஆதரவு

சமூக வலைதளங்களில் சிம்பு ரசிகர்களுக்கும் தல ரசிகர்களுக்கும் நல்ல நட்பு இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். சிம்புவின் இந்த புதிய முயற்சிக்கு அஜித் ரசிகர்கள் தாராளமாக தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

கண்ணீரே வந்துடுச்சு

கண்ணீரே வந்துடுச்சு

ஓ மை காட் கண்ணுல கண்ணீரே வந்துடுச்சு.. என் அண்ணன் லுக்கை பார்த்து.. தேங் யூ ஜிவிஎம் என ஏகப்பட்ட சிலம்பரசன் ரசிகர்கள் இயக்குநர் கெளதம் மேனனை பாராட்டியும் நன்றி தெரிவித்தும் வருகின்றனர். நிச்சயம் இந்த படம் சிம்புவுக்கு ஒரு புதிய பாதையை உருவாக்கும் என்றும் கூறுகின்றனர்.

நம்பவே முடியல இயக்குநர் யாரு

நம்பவே முடியல இயக்குநர் யாரு

இந்த படத்திற்கு இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனா அல்லது இயக்குநர் பாலாவான்னே தெரியலையே என ஏகப்பட்ட நெட்டிசன்கள் ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்து கலாய்த்து கமெண்ட் செய்து வருகின்றனர். தனுஷின் அசுரன் படத்தோட ஃபீல் வருது என்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

எப்படி இருந்த நான்

எப்படி இருந்த நான்

வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் குண்டாக இருந்த சிம்பு புகைப்படத்தையும் வெந்து தணிந்தது காடு போஸ்டரையும் போட்டு.. எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்னு டைட்டில் வச்சிருக்கலாம் என தனுஷ் ரசிகர்கள் ஒரு பக்கம் வச்சி செய்து வருகின்றனர். நடிகர் சிம்புவின் இந்த வித்தியாச முயற்சி வெற்றி பெறும் என்றே பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X