ரொமான்ஸ்க்கு ரெடியான சிம்பு – த்ரிஷா… விரைவில் தொடங்கும் விண்ணைத்தாண்டி வருவாயா 2
சென்னை: சிம்பு நடிப்பில் 2010ம் ஆண்டு வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது.
சிம்பு - திரிஷா கெமிஸ்ட்ரியில் கவுதம் மேனன், ஏஆர் ரஹ்மான் மேஜிக்கில் செம்ம கிளாஸிக் படமாக வெளியானது விண்ணைத்தாண்டி வருவாயா.
இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது குறித்து இப்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.

விண்ணைத்தாண்டி வருவாயா
2010ம் ஆண்டு சிம்பு, திரிஷா நடிப்பில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா, ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட் படங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. முழுக்க முழுக்க காதல் பின்னணியில் உருவான இந்தப் படத்தில் சிம்புவும் - த்ரிஷாவும் நடிப்பில் அசத்தியிருந்தனர். யதார்த்தமான காதலை தற்போதைய சூழலில் காதலர்கள் எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதை, துல்லியமாக படம் பிடித்திருப்பார் கெளதம் மேனன். படம் முழுவதும் சிம்பு - த்ரிஷா இருவருக்குமான உரையாடல்கள் தான் அதிகமாக இருந்தன. ஆனாலும், அவையனைத்தும் ரசிக்கும் படி ரொம்பவே கிளாஸிக்காக இருந்தது.

சிம்பு – கெளதம் – ஏஆர் ரஹ்மான்
முதன்முறையாக சிம்பு - கெளதம் - ஏஆர் ரஹ்மான் கூட்டணி இந்தப் படத்தில் தான் இணைந்தது. சிம்புவின் கார்த்தி, த்ரிஷாவின் ஜெஸ்ஸி கேரக்டருக்கு ஏஆர் ரஹ்மானின் இசையே உயிர் கொடுத்திருந்தது. ஒவ்வொரு பாடல்களும் சரி, பின்னணி இசையும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை ரசிகர்களால் கொண்டாட வைத்தது. முக்கியமாக விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி, இரண்டாம் பாகத்திற்கான லீடுடன் முடிவடைந்திருக்கும். இதனால், செகண்ட் பார்ட் எப்போது வரும் என ரசிகர்கள் காத்திருந்தனர்.

செகண்ட் பார்ட்க்கு ரெடி
ஆனால், இதனைத் தொடர்ந்து சிம்பு - கெளதம் - ஏஆர் ரஹ்மான் கூட்டணி, 'அச்சம் என்பது மடமையடா', 'வெந்து தணிந்தது காடு' என அடுத்தடுத்த படங்களில் பிஸியாகினர். இதில், கடந்த மாதம் வெளியான வெந்து தணிந்தது காடு படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. சிம்பு கேங்ஸ்டராக நடித்த இந்தப் படமும் செகண்ட் பார்ட்டுக்கான லீடுடன் முடிந்திருந்தது. அதனால், அடுத்து விண்ணைத்தாண்டி வருவாயா அல்லது வெந்து தணிந்தது காடு, இதில் எந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில், இப்போது விண்ணைத்தாண்டி வருவாயா செகண்ட் பார்ட் தான் அடுத்து உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்தாண்டு சூட்டிங்
அதன்படி, 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் இரண்டாம் பாகத்திற்கு கெளதம் கதையை எழுதிவிட்டதாக சொல்லப்படுகிறது. சிம்பு - த்ரிஷா நடிப்பில், மீண்டும் கவுதம் மேனன் - ஏஆர் ரஹ்மான் மேஜிக்கில் இந்தப் படம் உருவாகவுள்ளதாகவும், இதன் படப்பிடிப்பு அடுத்தாண்டு தொடங்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், விண்ணைத்தாண்டி வருவாயா 2 படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. இதனை முடித்த பின்னர் தான் வெந்து தணிந்தது காடு இரண்டாம் பாகம் குறித்து கெளதம் மேனன் முடிவு செய்யவுள்ளாராம். இன்னொரு பக்கம் சிம்புவின் கொரோனா குமார் படமும் விரைவில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











