»   »  'போடுங்கம்மா ஓட்டு அதுக்குதான் இந்த பாட்டு'..தேசிய அளவில் ட்ரெண்டாகும் சிம்பு!

'போடுங்கம்மா ஓட்டு அதுக்குதான் இந்த பாட்டு'..தேசிய அளவில் ட்ரெண்டாகும் சிம்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி சிம்பு எழுதி, பாடியிருக்கும் ஓட்டுப் போடல் சற்றுமுன் வெளியானது.

நெருங்கி வரும் சட்டமன்றத் தேர்தலையொட்டி தமிழ்நாடு முழுவதும் அனல் பறக்கும் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளன. மற்றொருபுறம் மக்களை 100% வாக்களிக்க வைக்க தேர்தல் ஆணையம் முயற்சித்து வருகிறது.

இதற்காக மக்கள் மத்தியில் பிரபலமானவர்களை வைத்து பல்வேறு விழிப்புணர்வு விளம்பரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் நடிகர் சிம்பு ஓட்டுப் போடுவதன் அவசியத்தை வலியுறுத்தி பாடல் ஒன்றை எழுதி வெளியிட்டிருக்கிறார். சிம்புவுடன் இணைந்து விடிவி கணேஷ் பாடியிருக்கும் இந்தப் பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தப் பாடலில் அஜீத் ஓட்டுப் போட வரிசையில் நிற்கும் காட்சிகளை இணைத்து அஜீத் ரசிகர்களையும் சிம்பு கவர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சிம்பு ரசிகர்கள் #STRVoteSong, #OttaPoduMama, #Showkali, #AYMRapSmash போன்ற ஹெஷ்டேக்குகளை உருவாக்கி, அவற்றை தேசிய அளவில் ட்ரெண்டடிக்கச் செய்து வருகின்றனர்.

English summary
Simbu's Vote Song Goes Viral on All Social Medias.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil