»   »  "இங்கேயே மன்னிப்பு கேட்டுக்கிறேன்..." உருக்கமாகப் பேசிய சிம்பு

"இங்கேயே மன்னிப்பு கேட்டுக்கிறேன்..." உருக்கமாகப் பேசிய சிம்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil
' என் எதிரி தனுஷோட ஃபர்ஸ்ட் ஷோ பார்த்தேன்...' - சிம்பு ஓப்பன் டாக்!- வீடியோ

சென்னை : 'சக்க போடு போடு ராஜா' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான நடிகர் சிம்பு கலந்து இந்த விழாவில் கொண்டார்.

விடிவி கணேஷ் தயாரிப்பில், சந்தானம் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை சேதுராமன் இயக்குகிறார். இந்த விழாவில் நடிகர் தனுஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இப்படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டன.

Simbu says sorry to AAA producer

இந்த விழாவில் பேசிய சிம்பு, 'AAA' படத்தின் தயாரிப்பாளரிடம் மன்னிப்புக் கேட்டார். "AAA படம் சரியா போகலைதான். நான் என் ஃபேன்ஸுக்காக ஜாலியா பண்ணின படம் அது. அந்தப் படம் வெற்றியடையாததால் எந்த வருத்தமும் படலை. அடுத்தடுத்த படங்களில் சரியாகிடும்.

ஒரே பார்ட்டா முடிய வேண்டியது கொஞ்சம் செலவானதால் ரெண்டு பார்ட்டா போகவேண்டியதாகிடுச்சு.. அதனால் தயாரிப்பாளருக்கு கொஞ்சம் மனக் கஷ்டம் இருந்தது. ஆனா, படம் நடந்துக்கிட்டு இருக்கும்போது இந்த பிரச்னையை சொல்லியிருக்கலாம்.

படம் முடிஞ்சதும் சொல்லியிருக்கலாம். படம் ரிலீஸ் ஆகி ஒரு மாசத்துக்குள்ள கூட சொல்லியிருக்கலாம். ஆனா, ஆறு மாசம் கழிச்சு யாரோ சொல்றாங்கனு இப்போ சொல்றதுதான் கஷ்டமா இருக்கு.

அதையும் மீறி நான் ஏதாவது தப்பு பண்ணியிருந்தேன்னா இப்போ இந்த ஸ்டேஜ்ல மன்னிப்பு கேட்டுக்கிறேன்... நான் நல்லவன்னு நான் சொல்லமாட்டேன். நான் பண்ணின தவறுகள் எனக்குத் தெரியும்" என உருக்கமாகப் பேசினார் சிம்பு.

English summary
The audio launch event of 'Sakka Podu Podu Raju' was held yesterday evening at the Kalaivaanar Arangam. The film was composed by actor Simbu, who made his debut as a composer. Simbu talked fervently at the function and apologized to the producer of 'AAA'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil