விரைவில் ரசிகர்களை சந்திப்பேன்.. சிம்பு உறுதி.. இப்படித்தான் மாநாடு ரிலீசப்பவும் சொன்னாரு!
சென்னை : நடிகர் சிம்பு -கௌதம் மேனன் கூட்டணியில் வெளியாகி அனைத்து தரப்பினரையும் கவர்ந்து வருகிறது வெந்து தணிந்தது காடு படம்.
இந்தப் படத்தின் விமர்சனங்கள் சிறப்பான வகையில் அமைந்துள்ள நிலையில், படம் கண்டிப்பாக ஹிட் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்தப் படத்தின் பிரமோஷனையொட்டி பேசிய நடிகர் சிம்பு பல விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார்.

நடிகர் சிம்பு
நடிகர் சிம்பு மிகுந்த சர்ச்சைகளுக்கு உள்ளான நிலையிலும் பல வருடங்களை கடந்து சினிமாவில் தொடர்ந்து ஹிட் ஹீரோவாக காணப்படுகிறார். இவர், பாடகர், தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் என பன்முகத் திறமை கொண்டவராக உள்ள நிலையில், நடனத்திலும் பட்டையை கிளப்பி வருகிறார்.

சிறப்பான கதை தேர்வு
தற்போது சிறப்பான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்துவரும் சிம்புவின் நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியானது மாநாடு. வெங்கட் பிரபு இயக்கத்தில் இந்தப் படம் வெளியான நிலையில், டைம் லூப் அடிப்படையில் வெளியான இந்தப் படம் சிம்புவின் நடிப்பால் மேலும் மெருகேறியது. தொடர்ந்து 100 கோடி ரூபாய் கிளப்பிலும் இணைந்தது.

பாராட்டுக்குள்ளான சிம்பு நடிப்பு
இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து வெந்து தணிந்தது காடு, பத்து தல உள்ளிட்ட படங்களில் சிம்பு நடித்துவந்த நிலையில் இன்றைய தினம் வெந்து தணிந்தது காடு படம் ரிலீசாகியுள்ளது. கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் முத்துவாக நடித்துள்ளார் சிம்பு. மேலும் பலரும் பாராட்டும் வகையில் இந்தப் படத்தில் அவரது நடிப்பு காணப்படுகிறது.

விரைவில் ரசிகர்களை சந்திப்பேன்
முன்னதாக இந்தப் படத்தின் பிரமோஷனுக்காக பேசிய சிம்பு, தான் விரைவில் ரசிகர்களை நேரில் சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். பத்து தல படத்தின் சூட்டிங்கும் ஏறக்குறைய நிறைவடையும் தருவாயில் உள்ளது. விரைவில் அந்தப் படமும் ரிலீசாக உள்ளது. இதனிடையே அந்தப் படத்தின் ரிலீசுக்கு முன்னதாக தான் ரசிகர்களை சந்திக்க உள்ளதாக சிம்பு தெரிவித்துள்ளார்.

முன்னதாக அறிவிப்பு
முன்னதாக மாநாடு படத்தின் சக்சஸ் மீட் நடைபெற்ற நிலையில், அதில் சிம்பு கலந்துக் கொள்ளவில்லை. இது பல விமர்சனங்களை எழுப்பியது. இதையடுத்து தான் தனியாக ரசிகர்களை சந்திக்க உள்ளதாக அறிவித்தார் சிம்பு. ஆனால் அந்த சந்திப்பு தவிர்க்க முடியாத காரணங்களால் இதுவரை நடைபெறவில்லை.

ரசிகர்கள் காத்திருப்பு
இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தின் பிரமோஷனின்போது தான் விரைவில் ரசிகர்களை சந்திக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார் சிம்பு. இந்த சந்திப்பையாவது அவர் படத்தின் சக்சஸ் மீட்டிற்கு முன்னதாக நடத்துவார் என்று எதிர்பார்க்கலாம். ரசிகர்களும் இதுபோன்ற ஒரு சந்திப்பிற்காக நீண்ட நாட்களாக காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











