»   »  நிதியுதவி கிடைக்காததால் நிறுத்தப்பட்டது சிம்பு - செல்வராகவனின் கான்

நிதியுதவி கிடைக்காததால் நிறுத்தப்பட்டது சிம்பு - செல்வராகவனின் கான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிம்பு - செல்வராகவன் முதன்முதலாக இணைந்த கான் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மொத்தமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. இது குறித்து அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் செல்வராகவன் அறிவித்திருக்கிறார்.

படத்தின் படப்பிடிப்பு தொடங்கி பலநாட்கள் ஆகியும் கூட தகுந்த நிதியுதவி படத்திற்கு கிடைக்கவில்லையாம்.இதனால் மேற்கொண்டு படப்பிடிப்பை தொடராமல் செல்வராகவன் கான் படத்தை நிறுத்தி விட்டார் என்று கூறுகின்றனர்.


செல்வராகவனின் இந்த அறிவிப்பால் தற்போது சிம்புவின் திரை வாழ்க்கையில் மீண்டும் தொய்வு விழுந்திருக்கிறது.


கான்

கான்

சிம்பு, ஜெகபதி பாபு, டாப்ஸி பன்னு மற்றும் கேத்தரின் தெரசா நடிப்பில் உருவாகி வந்த கான் திரைப்படம் நிறுத்தி வைக்கப்பட்டதாக பல்வேறு வதந்திகள் உலா வந்தன.இந்நிலையில் கான் நிறுத்தப்பட்டது உண்மைதான் என்று கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் படத்தின் இயக்குனர் செல்வராகவன்.


வதந்திகள்

கான் படம் குறித்து நிறைய வதந்திகள் உலா வருகின்றன,நானும் நிறைய கேட்டு வருகிறேன். நான் சில விஷயங்களை இங்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன் என்று செல்வராகவன் கூறியிருக்கிறார்.


மனதுக்கு நெருக்கமான

தொடர்ந்து அவர் கூறும்போது "கான் படத்தின் கதை என் மனதுக்கு மிகவும் நெருக்கமானது, மேலும் எனது கனவுத் திட்டத்திற்கு தகுந்தாற்போல கான் படக்குழுவும் அமைந்தது".


தற்காலிகமாக

கான் படத்தின் படப்பிடிப்பை இப்போதைக்கு தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறோம், நாங்கள் அனைவரும் இதனை ஒரே கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறோம்.


சிம்புவை மிஸ் பண்ணுகிறேன்

கான் படத்தை அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைத்திருக்கிறேன், படத்திற்கு தேவையான நிதி கிடைத்ததும் கான் தொடங்கப்படும். சிம்பு மற்றும் கான் படக்குழுவினரை நான் மிகவும் மிஸ் செய்கிறேன்" என்று செல்வராகவன் தெரிவித்திருக்கிறார்.


அச்சம் என்பது மடமையடா

அச்சம் என்பது மடமையடா

இது நம்ம ஆளு திரைப்படம் எப்போது வெளியாகும் என்று தெரியாத நிலையில் சிம்புவின் கையில் தற்போது அச்சம் என்பது மடமையடா திரைப்படம் மட்டுமே இருக்கிறது. கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் அச்சம் என்பது மடமையடா தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகி வருகிறது.


English summary
Selvaraghavan-Silambarsan 'Kaan' Movie Now dropped for financial issues. Selvaraghavan took in twitter and wrote "We will resume the project next year once we have restructured the finances. In the meantime I will miss working with Simbu and the crew".
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil