»   »  சிம்பு வாழ்க்கையின் அடுத்த கட்டங்களுக்கு செல்ல வேண்டும்... கவுதம் மேனன் அறிவுரை

சிம்பு வாழ்க்கையின் அடுத்த கட்டங்களுக்கு செல்ல வேண்டும்... கவுதம் மேனன் அறிவுரை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சிம்பு வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்று இயக்குநர் கவுதம் மேனன் அறிவுரை கூறியிருக்கிறார்.

சமீபகாலமாக சிம்பு திரையுலகிலும் சொந்த வாழ்விலும் ஏராளமான பிரச்சினைகளை சந்தித்து வருகிறார். அவர் நடித்து வந்த கான் திரைப்படம் பணப்பிரச்சினை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் சிம்புவை வைத்து அச்சம் என்பது மடமையடா படத்தை இயக்கி வரும் கவுதம் மேனன் சிம்புவிற்கு அறிவுரை கூறியிருக்கிறார்.

சிம்பு

சிம்பு

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக சிம்பு பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார். அவர் நடித்து வந்த கான் திரைப்படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இது நம்ம ஆளு திரைப்படமும் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில் சிம்புவை வைத்து படமெடுத்து வரும் இயக்குநர் கவுதம் மேனன் சிம்புவிற்கு அறிவுரை கூறியிருக்கிறார்.

கடின உழைப்பாளி

கடின உழைப்பாளி

எனக்கும் சிம்புவுக்கும் நல்ல பந்தம் இருக்கிறது, நானும் அவர் தாமதமாக வருகிறார் என்பதை குறிப்பிட்டுள்ளேன். அவர் தாமதமாக வந்தாலும் தனக்கு உடல்நிலை சரியில்லை என்றால் முன்கூட்டியே சொல்லிவிடுவார். ஒருநாள் வராவிடில் அடுத்த நாள் தொடர்ந்து 10 மணி நேரம் கூட நடித்துக் கொடுப்பார், அந்த அளவிற்கு சிம்பு ஒரு கடின உழைப்பாளி.

நம்பர் 1 நாயகன்

நம்பர் 1 நாயகன்

சிம்புவிற்கு சில கடினமான தருணங்கள் வாழ்க்கையில் நடந்தது, எனக்கும் அவை தெரியும். ஆனால் அதையெல்லாம் மறந்து சிம்பு வாழ்க்கையின் அடுத்த கட்டங்களுக்குச் செல்ல வேண்டும் . அவர் இளைஞராக இருக்கும் பட்சத்தில் கடந்த கால விஷயங்களை மறப்பது அவருக்கு இன்னும் சுலபம். சிம்புவை நான் நம்பர் 2 அல்லது நம்பர் 4 நடிகராகப் பார்க்க எண்ணவில்லை அவரை நம்பர் 1 நாயகனாகப் பார்க்கவே ஆசைப்படுகிறேன்.

வருடத்திற்கு 3, 4

வருடத்திற்கு 3, 4

எத்தனையோ நடிகர்கள் ஒரு படம் ஹிட் கொடுக்க அவ்வளவு கடின உழைப்பைக் கொட்டிக் காத்திருக்கிறார்கள், ஆனால் சிம்புவின் விஷயத்தில் ஹிட் என்பது தானாகவே அமைந்துள்ளது. ஒரு வருடத்திற்கு 3 அல்லது 4 படங்களாவது சிம்பு கொடுக்க வேண்டும் என நான் ஆசைபடுகிறேன் என்று கவுதம் மேனன் தெரிவித்திருக்கிறார்.

சிம்பு கவுதம் மேனனின் ஆசையை நிறைவேற்றுவாரா?

English summary
Director Gautham Menon says in Recent Interview "Actor Simbu Should Forget his Issues and go to the Next Level of Life".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil