»   »  ஜி.வி.பிரகாஷின் 'புரூஸ்லி'க்காக குத்துப்பாட்டு பாடிய சிம்பு!

ஜி.வி.பிரகாஷின் 'புரூஸ்லி'க்காக குத்துப்பாட்டு பாடிய சிம்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வளர்ந்து வரும் புரூஸ்லி படத்திற்காக குத்துப்பாடலொன்றை நடிகர் சிம்பு பாடியிருக்கிறார்.

நடிகர் என்பதைத் தாண்டி நல்ல பாடகராகவும் சிம்பு வலம்வருகிறார்(பீப் பாடல் விதிவிலக்கு). சமீபகாலமாக சிம்பு பாடும் பாடல்கள் பெரியளவில் ஹிட்டடித்து வருகின்றன.


Simbu Sings G.V.Prakash's Brucelee

இந்நிலையில் ஜி.வி.பிரகாஷுக்காக இப்படத்தில் இடம்பெறும் குத்துப்பாடலொன்றை சிம்பு பாடியிருக்கிறார். இது ஒரு சூப்பர் குத்துப்பாடல். படத்திற்கு இப்பாடல் பக்கபலமாக இருக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.


எனக்கு இன்னொரு பேர் இருக்கு படத்துக்குப்பின் புரூஸ்லி படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வருகிறார். அறிமுக இயக்குநர் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கி வரும் இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக கீர்த்தி கர்பந்தா நடித்து வருகிறார்.


காமெடிப் படமாக உருவாகி வரும் புரூஸ்லியில் மொட்டை ராஜேந்திரன், பால சரவணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.


சிம்புவின் நடிப்பில் இது நம்ம ஆளுவைத் தொடர்ந்து அச்சம் என்பது மடமையடா விரைவில் வெளியாகவிருக்கிறது. இதுதவிர ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் முக்கிய அறிவிப்பொன்றை இன்று வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது.

English summary
Actor Simbu Sings a Item Song in G.V.Prakash's Brucelee.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil