»   »  'நான் லேட்டா ஷூட்டிங் வந்தாலும்..' - சிம்பு பேச்சால் ஆச்சரியம்!

'நான் லேட்டா ஷூட்டிங் வந்தாலும்..' - சிம்பு பேச்சால் ஆச்சரியம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் முன்னெடுத்து நடத்திக் கொண்டிருக்கும் வேலை நிறுத்தத்திற்கு அனைத்து தயாரிப்பாளர்களும் ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில், நேற்று தயாரிப்பாளர் சங்கத்தினர், தமிழ் சினிமா இயக்குனர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் உள்ளிட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

தயாரிப்பாளர் சங்கம் நடத்திய இந்தச் சிறப்புக் கூட்டத்தில் நடிகர் சிம்பு கலந்து கொண்டார். அங்கு சிம்புவின் பேச்சு, பலராலும் ஆமோதிக்கப்பட்டதாம்.

சிறப்பு கூட்டம்

சிறப்பு கூட்டம்

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் முன்னெடுத்து நடத்திக் கொண்டிருக்கும் ஸ்ட்ரைக்கிற்கு அனைவரும் ஆதரவு கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில், நேற்று தயாரிப்பாளர் சங்கத்தினர், இயக்குனர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் உள்ளிட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

பகை மறந்து ஆதரவு

பகை மறந்து ஆதரவு

இதுவரை விஷாலுடன் மோதலில் ஈடுபட்டு வந்த சீனியர் தயாரிப்பாளர்கள் சிலரும் கூட இந்த ஸ்ட்ரைக் தேவையான ஒன்று, இதன் மூலம் பல தயாரிப்பாளர்கள் காப்பாற்றப்படுவார்கள் என்ற எண்ணத்தில் ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

சிம்பு

சிம்பு

நேற்று தயாரிப்பாளர் சங்கம் நடத்திய சிறப்புக் கூட்டத்தில் நடிகர் சிம்பு வந்து கலந்து கொண்டார். 'AAA' பட விவகாரத்தில் சிம்புவுக்கும், தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இடையே மோதல் இருக்கிறது. இருந்தாலும், சிம்பு நேற்று கலந்து கொண்டது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

வெளிப்படையான பேச்சு

வெளிப்படையான பேச்சு

சிம்பு நேற்று வெளிப்படையாகப் பேசிய பேச்சுக்கும் தயாரிப்பாளர்களிடம் ஆதரவு இருந்ததாம். சிம்பு பேசும் போது, "நடிகர்கள் எத்தனை கோடி சம்பளம் வாங்குகிறார்கள் என்பது பற்றி பேசுவது தேவையற்றது. நான் இலவசமாகக் கூட நடித்துக் கொடுப்பேன்.

தாமதமாக வந்தாலும்

தாமதமாக வந்தாலும்

நடிகர்களுக்கும் அவர்களது படங்களின் வசூல் உண்மை நிலவரம் தெரிய வேண்டும். அதை தியேட்டர்கள் முறையாகத் தெரிவிக்க வேண்டும். அதைப் பொறுத்து நடிகர்கள் அவர்களது சம்பளத்தை நிர்ணயம் செய்வார்கள். நான் படப்பிடிப்பிற்குத் தாமதமாக வந்தாலும் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே எனது வேலையை முடித்துக் கொடுத்துவிடுவேன்" என சிம்பு பேசியியுள்ளார்.

ஆச்சரியம்

ஆச்சரியம்

சிம்பு கூட்டத்திற்கு வந்து கலந்து கொண்டதும், அவர் பேசிய பேச்சுகளும் கருத்தில் கொள்ளப்படும் என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர்களின் இந்த திடீர் ஒற்றுமை தற்போது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறதாம்.

English summary
Yesterday, Tamil cinema producers council talks with directors, distributors and theater owners. Actor Simbu participated in this special meeting. In this meeting, Simbu's speech was accepted by many.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X