»   »  'நான் விஜய்க்கு தம்பி.. அஜித்துக்கு ரசிகன்' - சிம்பு ஓபன் டாக்!

'நான் விஜய்க்கு தம்பி.. அஜித்துக்கு ரசிகன்' - சிம்பு ஓபன் டாக்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
சிம்புவின் நயனும் த்ரிஷாவும்- வீடியோ

சென்னை : அஜித்தின் தீவிரமான ரசிகராக இருந்து வருபவர் சிம்பு. அஜித் படம் ரிலீஸாகும் போது முதல்நாள், முதல் ஷோ பார்த்துவிடும் அளவுக்கு வெறித்தன ரசிகர்.

சிம்புவின் 'வாலு' படம் வெளியாவதில் பிரச்னை எழுந்தபோது, சிம்புவுக்கு உதவ முன்வந்தார் விஜய்.

இந்நிலையில், அஜித் பற்றியும் விஜய் பற்றியும் சமீபத்தில் கலந்துகொண்ட டிவி நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கிறார் சிம்பு.

அஜித் ரசிகர்

அஜித் ரசிகர்

சிம்பு அஜித்தின் தீவிரமான ரசிகராக இருந்து வருபவர் என்பது பலருக்கும் தெரியும். அஜித் படம் ரிலீஸாகும் போது முதல்நாள், முதல் ஷோ பார்த்துவிடும் அளவுக்கு வெறித்தன ரசிகர். அதை அவரே பல இடங்களில் சொல்லி இருக்கிறார்.

விஜய் உதவி

விஜய் உதவி

சிம்புவின் 'வாலு' படம் வெளியாவதில் பிரச்னை எழுந்தபோது, சிம்புவுக்கு உதவ முன்வந்தார் விஜய். மேலும் அஜித் பற்றி தன் ட்விட்டரில் ஒரு கருத்தை பதிவிட்டு மாட்டிக்கொண்டார் சிம்பு. அதனால், அஜித் ரசிகர்களோடு முட்டல் ஏற்பட்டது.

அஜித் தான் காரணம்

அஜித் தான் காரணம்

சமீபத்தில் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் சிம்பு. அப்போது அவர் பேசும்போது, "நான் எப்போதுமே மனசுல பட்டதை வெளிப்படையாக தைரியமாக பேசுவேன். அதற்கு காரணம் அஜித் தான். அவரிடமிருந்து தான் இதை கற்றுக்கொண்டேன்" என்றார்.

விஜய்யின் தம்பி

விஜய்யின் தம்பி

"ரஜினி, விஜய்யும் என்னைக் கவர்ந்த நடிகர்கள். இருவருமே கடினமாக உழைத்து முன்னுக்கு வந்தவர்கள். அதோடு, நான் கஷ்டப்படும்போது எனக்கு உதவி செய்த தமிழரான விஜய்யின் தம்பியாக இருப்பதில் எப்போதுமே நான் பெருமைப்படுகிறேன்" எனக் கூறினார் சிம்பு.

English summary
Actor Simbu is a diehard fan of Ajith. Vijay helped simbu when he got into trouble with the release of 'Vaalu'. Recently, Simbu has spoken proudly about Ajith and Vijay in a TV show .

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil