வெளியானது பத்து தல ஃபர்ஸ்ட் சிங்கிள்... ஏஆர் ரஹ்மான் வாய்ஸில் சிம்பு மாஸ் காட்டும் நம்ம சத்தம்

சென்னை: சிம்புவின் 40வது பிறந்தநாளை முன்னிட்டு பத்து தல படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு கேங்ஸ்டராக நடித்துள்ள பத்து தல படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் மார்ச் 30ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், நம்ம சத்தம் என்ற ஃபர்ஸ்ட் சிங்கிள் நள்ளிரவு வெளியாகி ட்ரெண்டிங்கில் உள்ளது.

ஏஆர் ரஹ்மான் குரலில் சிம்புவின் மாஸ் எனர்ஜியோடு உருவாகியுள்ள இந்தப் பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

 பத்து தல ஃபர்ஸ்ட் சிங்கிள்

பத்து தல ஃபர்ஸ்ட் சிங்கிள்

மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களை தொடர்ந்து சிம்பு நடித்துள்ள பத்து தல மார்ச் 30ம் தேதி வெளியாகிறது. ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கேரக்டரில் சிம்பு நடித்துள்ள பத்து தல, கன்னடத்தில் சூப்பர் ஹிட் அடித்த முஃப்தி படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. கன்னடத்தில் வெளியான முஃப்தி படத்தில் சிவராஜ்குமார் கேங்ஸ்டராக நடித்திருந்தார். ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் 'சில்லுன்னு ஒரு காதல்' கிருஷ்ணா பத்து தல படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில், சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு பத்து தல ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று வெளியாகியுள்ளது.

 ஏஆர்ஆர் குரலில் நம்ம சத்தம்

ஏஆர்ஆர் குரலில் நம்ம சத்தம்

பத்து தல ஷூட்டிங் கடந்தாண்டு நவம்பரில் முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து போஸ்ட் புரோடக்‌ஷன் வேலைகளில் படக்குழு பிஸியாகவுள்ளது. இந்நிலையில் தான் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு பத்து தல ஃபர்ஸ்ட் சிங்கிளை படக்குழு வெளியிட்டுள்ளது. 'நம்ம சத்தம்' எனத் தொடங்கும் இந்தப் பாடலை விவேக் எழுதியுள்ளார். ஏஆர் ரஹ்மானின் ரகளையான இசையில் அவரும் யோகி சேகரும் இணைந்து பாடியுள்ளனர். கோரஸில் ஆரம்பிக்கும் நம்ம சத்தம் பாடல், அதன் பின்னர் ரஹ்மான் வாய்ஸில் ரசிகர்களை ஆட்டம் போட வைத்துள்ளது.

 ட்ரெண்டிங்கில் பத்து தல

ட்ரெண்டிங்கில் பத்து தல

இந்தப் பாடலில் கறுப்பு வேஷ்டி, சட்டையில் லைட்டான சால்ட் அண்ட் பெப்பர் லுக்குடன் என்ட்ரி கொடுக்கிறார் சிம்பு. "கோடி நெருப்பை ஆரம்பிக்குற ஆற்றல் இருக்கும் வத்திக்குச்சி, அதுகாலம் வரும்ன்னு காத்திருக்கல பாஞ்சி உரசி பத்திக்கிச்சி" என வெறித்தனமாக ஆரம்பிக்கும் இந்தப் பாடல், சிம்புவுக்கு பவர்ஃபுல் இன்ட்ரோவாக அமைந்துள்ளது. அதேபோல் "எல்லாமே மாயம்... ஏத்துக்கோ காயம்... கொஞ்சம் தொலைஞ்சு போவோம்..." போன்ற லிரிக்ஸ் சிம்பு ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

 விரைவில் பத்து தல டீசர்

விரைவில் பத்து தல டீசர்

சிம்புவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான நம்ம சத்தம் பாடலை சிம்புவின் ரசிகர்கள் தொடர்ந்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ஃபர்ஸ்ட் சிங்கிளைத் தொடர்ந்து அடுத்தடுத்து பத்து தல படத்தின் டீசர் உட்பட மற்ற அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிம்புவுடன் பிரியா பவானி சங்கர், கவுதம் கார்த்திக், கலையரசன், கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இதனிடையே இன்று 40வது பிறந்தநாள் கொண்டாடும் சிம்புவுக்கு பத்து தல படக்குழுவினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X