»   »  இது நம்ம ஆளுவை மக்கள் வெற்றியடையச் செய்ததில் சந்தோஷம் - சிம்பு

இது நம்ம ஆளுவை மக்கள் வெற்றியடையச் செய்ததில் சந்தோஷம் - சிம்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இது நம்ம ஆளு படத்தை மக்கள் வெற்றியடையச் செய்ததில் சந்தோஷம் என்று நடிகர் சிம்பு கூறியிருக்கிறார்.

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, சூரி நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் இது நம்ம ஆளு.


படத்தின் நீளம் அதிகம் என கலவையான விமர்சனங்கள் எழுந்தபோதும் இளைஞர்கள் மத்தியில் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.


ஓபனிங்

ஓபனிங்

சிம்புவின் திரை வாழ்க்கையில் இதுவரை கண்டிராத ஓபனிங் இப்படத்துக்கு கிடைத்துள்ளது. வல்லவன் படத்துக்குப் பின் 10 வருடங்கள் கழித்து சிம்பு-நயன்தாரா சேர்ந்து நடித்ததும், சூரியின் காமெடி,பாண்டிராஜின் இயக்கம் ஆகியவை இப்படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளன.


25 கோடி

25 கோடி

தமிழ்நாடு முழுவதும் 17 கோடிகளுக்கும் அதிகமாக இது நம்ம ஆளு வசூல் செய்துள்ளது. இது தவிர உலக அளவில் இப்படம் 25 கோடிகள் வரை வசூல் செய்திருக்கலாம் என்று பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிம்பு

சிம்பு

இது நம்ம ஆளு வெற்றிகுறித்து சிம்பு '' என்னுடைய படத்தை மக்கள் வெற்றியடைய வைத்தது சந்தோஷமாக உள்ளது. இப்படி ஒரு நாளுக்காகக் காத்திருந்தேன். கடவுளின் அருளால் அது இப்போது நடந்து விட்டது'' என்று கூறியிருக்கிறார்.


அச்சம் என்பது மடமையடா

அச்சம் என்பது மடமையடா

மற்றொருபுறம் சிம்பு-மஞ்சிமா மோகன் நடிப்பில் நேற்று வெளியான அச்சம் என்பது மடமையடா படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படம் வருகின்ற ஜூலை 15ம் தேதி வெளியாகிறது. அடுத்தடுத்து சிம்பு படங்கள் வெளியாவது அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


English summary
''Now i feel very happy for Idhu Namma Aalu Success'' Simbu says in Recent Interview.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil