»   »  விடிய, விடிய குத்தாட்டம்... விடிந்ததும் புதுப்பட பூஜை... தீயாய் வேலை செய்யும் சிம்பு!

விடிய, விடிய குத்தாட்டம்... விடிந்ததும் புதுப்பட பூஜை... தீயாய் வேலை செய்யும் சிம்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள இன்னும் பெயரிடப்படாத புதிய படத்திற்கு இன்று பூஜை போட்டுள்ளனர்.

படங்கள் ரிலீஸ் ஆவதில் தாமதம், பீப் பாடல் என தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வந்தாலும், சிம்புவுக்கு படவாய்ப்புகள் தொடர்ந்து வந்த வண்ணம் தான் உள்ளன.


ஏற்கனவே, பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா ஜோடி சேர்ந்து நடித்த இது நம்ம ஆளு படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இதேபோல், கௌதம்மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த ‘அச்சம் என்பது மடமையடா' படமும் ரிலீசுக்கு ரெடி.


பூஜை...

பூஜை...

இந்நிலையில், வாலு படத்தை இயக்கிய விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படத்திற்கு இன்று போட்டுள்ளனர். இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரிக்கவிருக்கிறார்.


விரைவில் ஷூட்டிங்...

விரைவில் ஷூட்டிங்...

விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரம் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மெகா பட்ஜெட் படம்...

மெகா பட்ஜெட் படம்...

இது தவிர ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மெகா பட்ஜெட்டில் உருவாகும் புதிய படத்திலும் சிம்பு நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
குத்துப்பாட்டு...

முன்னதாக நேற்று இரவு முழுவதும் ‘இது நம்ம ஆளு' படத்துக்காக ‘மாமன் வெயிட்டிங்' பாடலுக்கு சிம்பு நடனம் ஆடும் காட்சிகள் படமாக்கப்பட்டது. இரவில் படப்பிடிப்பில் கலந்து கொண்டு காலையில் இந்தப் பட பூஜையில் சிம்பு பங்கேற்றுள்ளார்.
English summary
Director Vijay Chandar on Friday announced that he will team up with Simbu once again for a new film. The two had previously also worked together on Vaalu. The film was held up for three years before it released but it was received well by the audience.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil