»   »  நான் ஏன் கர்நாடக மக்களை ஒரு கிளாஸ் தண்ணீர் கொடுக்கச் சொன்னேன் தெரியுமா?: சிம்பு

நான் ஏன் கர்நாடக மக்களை ஒரு கிளாஸ் தண்ணீர் கொடுக்கச் சொன்னேன் தெரியுமா?: சிம்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil
கர்நாடகாவில் சிம்புவுக்கு கட் அவுட்! வைரலாகும் சிம்புவின் #UNITEDFORHUMANITY- வீடியோ

சென்னை: தன் பேச்சை மதித்து தமிழர்களுக்கு ஒரு கிளாஸ் தண்ணீர் கொடுத்த கர்நாடக மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் சிம்பு.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி திரையுலகினர் நடத்திய போராட்டத்தில் சிம்பு கலந்து கொள்ளவில்லை. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்திற்கு தண்ணீர் தருவதற்கு பொதுமக்களாகிய எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்பதை பிரதிபலிக்கும் வகையில் ஏப்ரல் 11 ம் தேதி மாலை 3 மணி முதல் 6 மணிக்குள் கர்நாடக மக்கள் ஒரு கிளாஸ் தண்ணீரை தமிழனுக்கு கொடுத்து வீடியோவாக வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அவரின் கோரிக்கையை ஏற்று கர்நாடக மக்கள் கிளாஸ் அல்ல ஜக்கிலேயே தண்ணீர் கொடுத்துள்ளனர்.

தமிழர்கள்

சிம்புவின் கோரிக்கையை ஏற்று கர்நாடக மக்கள் தமிழர்களுக்கு ஒரு கிளாஸ் தண்ணீர் கொடுத்து வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

ஜக்

கிளாஸ் என்ன சார் ஜக்கிலேயே தண்ணீர் தருகிறோம் என்று கூறி ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு சென்ற பேருந்தில் இருந்தவர்களுக்கும் அம்மாநில மக்கள் தண்ணீர் கொடுத்துள்ளனர்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

தான் சொன்ன ஒரு வார்த்தைக்கு இவ்வளவு மதிப்பு கொடுத்து காவிரி நீரை தமிழர்களுடன் பகிர்ந்து கொள்வதில் தங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பதை நிரூபித்த கர்நாடக மக்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார் சிம்பு.

தமிழக மக்கள்

தமிழக மக்கள்

கர்நாடக மக்களுக்கு தமிழர்களை பிடிக்காது, தமிழர்கள் நல்லா இருக்கக் கூடாது, தமிழ் மக்களுக்கு தண்ணீர் கிடைக்கக் கூடாது என்று வில்லன் மாதிரியே காட்டி காட்டி எங்களிடம் வெறுப்பை உருவாக்க அவர்கள் ஏற்படுத்திய பிம்பத்தை உடைக்க நான் எடுத்த முயற்சிக்கு ஆதரவு அளித்து அவர்களின் முகத்தில் எல்லாம் கரியை பூசி நாங்களும் மனிதர்கள் தான் என்று தண்ணீர் கொடுத்து அந்த பிம்பத்தை உடைத்ததற்கு நன்றி என்கிறார் சிம்பு.

வீடியோ

காவிரி பிரச்சனை என்பது அரசியல் விளையாட்டு என்று கூறும் சிம்புவின் வீடியோ இது தான்.

English summary
Actor Simbu has thanked the people of Karnataka for giving a glass of water to Tamils living there. He feels so happy after our neighbours have listened to him.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X