Just In
- 7 hrs ago
கொல மாஸ்.. சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் ‘குட்டி ஸ்டோரி’ பாடும் விஜய்.. வெளியானது வீடியோ பாடல்!
- 7 hrs ago
டைட்டான டிரஸ்ஸில் மெட்ராஸ் பட நடிகையின் அசத்தல் லுக்!
- 7 hrs ago
செவுத்துல பல்லி மாதிரி ஒட்டிக்கிட்டு சமந்தா கொடுத்த கலக்கலான கிறங்க வைக்கும் போஸ்!
- 7 hrs ago
ஆக்ட்ரஸ் ரோஷினி கிட்ட பந்தா கிடையாது காஸ்டியும் டிசைனர் ப்ரீத்தியின் முதல் பேட்டி
Don't Miss!
- News
சங்கமம் கலைநிகழ்ச்சிகளுடன் இன்று மினசோட்டா தமிழ் சங்கத்தின் பொங்கல் விழா!
- Automobiles
டாடா ஹாரியர் காரின் விற்பனை அமோகம்... அடுத்து இந்திய சந்தையை கலக்க வருகிறது புதிய சஃபாரி...
- Sports
தம்பிகளா.. அப்படி ஓரமா போய் உட்காருங்க.. இளம் வீரர்களுக்கு நோ சான்ஸ்.. இந்திய அணி முடிவு!
- Finance
யூனியன் பட்ஜெட் 2020-க்காக சிறப்பு ஆப்.. மோடி அரசின் புதிய டிஜிட்டல் சேவை..!
- Lifestyle
எல்லோரும் விரும்பும் கூட்டாளராக நீங்க இருக்க என்ன பண்ணனும் தெரியுமா?
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
டி.ராஜேந்தரின் புதிய தயாரிப்பாளர் சங்க அறிமுக விழா.. இதில் சிம்புவும் சேரப்போறாராமே?
சென்னை: டி.ராஜேந்தர் தொடங்கியுள்ள புதிய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில், நடிகர் சிம்பு சேர இருப்பதாகக் கூறப்படுகிறது.
தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கு, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் என்ற அமைப்பு ஏற்கனவே செயல்பட்டு வருகிறது.
இதுமட்டுமின்றி பிலிம் சேம்பர், கில்டு போன்ற அமைப்புகள் இருக்கும் நிலையில், புதிய அமைப்பு ஒன்று கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது.

நிர்வாகிகள் தேர்தல்
தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து பிரிந்து சென்ற சில தயாரிப்பாளர்கள், பாரதிராஜா தலைமையில், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் என்ற அமைப்பை தொடங்கினர். இந்த நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு கடந்த மாதம் 22 ஆம் தேதி, புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நடந்தது.

தோல்வி அடைந்தனர்
அதில், மறைந்த டைரக்டரும், தயாரிப்பாளருமான ராமநாராயணனின் மகனுமான முரளி ராம நாராயணன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரை எதிர்த்து போட்டியிட்ட டைரக்டரும், தயாரிப்பாளருமான டி.ராஜேந்தர் மற்றும் தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் ஆகியோர் தோல்வி அடைந்தனர்.

புதிய சங்கம்
பின்னர் அவர் இந்த தேர்தல் நேர்மையாக நடக்கவில்லை என்றும் இதில் முறைகேடு நடந்ததாகவும் புகார் கூறினார். இதற்கிடையே, டி.ராஜேந்தர் தலைமையில், தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற பெயரில் புதிய சங்கம் உருவானது. இந்த சங்கத்தின் அறிமுக விழா இன்று நடைபெற்றது.

புதிய தயாரிப்பாளர்கள்
இதில், செயலாளர்கள் என். சுபாஷ் சந்திரபோஸ், ஜேஸ்கே சதிஷ்குமார், பொருளாளர் - கே. ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் சங்கம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், கூறியிருப்பதாவது: புதிய, சிறிய படத் தயாரிப்பாளர்களை ஊக்கப்படுத்தி உருவாக்க நினைக்கிறோம்.

உரிய வழி காட்டுவோம்
VPF போன்ற கட்டணங்களை நீக்கி, வேண்டாத செலவீனங்களை தவீர்த்து, குறைந்த முதலீட்டில் படமெடுக்க உறுதுணையாக இருப்போம். திரையரங்குகளில் வெளியிட முடியாமல், சிக்கி தவிக்கும் சிறு பட தயாரிப்பாளர்களின் படங்களை திரையிடுவதற்கு, புதிய, உரிய வழி காட்டுவோம். வெளிநாட்டு உரிமை, சாட்டிலைட், ஓடிடி மற்றும் கேபிள் டி.வி வியாபாரத்தை பெருக்கி லாபம் ஈட்ட முயற்சி மேற்கொள்வோம்.

நடிகர் சிலம்பரசன்
பட வெளியீட்டின் போது ஏற்படும் சிக்கல்களை, இயன்றவரை சுமுகமாக பேசி தீர்க்க ஆவண செய்வோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் உஷா ராஜேந்தர், STR பிக்சர்ஸ் உரிமையாளரான நடிகர் சிலம்பரசன் உள்ளிட்ட பலர் இந்த சங்கத்தில் உறுப்பினராக இணைய இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.