“ரீமேக், செகண்ட் பார்ட்லாம் வேண்டாம்… என்கூட சேர்ந்து நடிங்க”: சிம்புவுக்கு கமலின் அன்புக் கட்டளை

சென்னை: சிம்பு நடித்துள்ள 'வெந்து தணிந்தது காடு' படத்தின் ஆடியோ, ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெந்து தணிந்தது காடு படக்குழு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிம்புவுக்கு உலக நாயகன் கமல் அன்புக் கட்டளை விடுத்துள்ளார்.

வெந்து தணிந்தது காடு திருவிழா

வெந்து தணிந்தது காடு திருவிழா

சிம்பு ரசிகர்களுக்கு நேற்று கொண்டாட்டமான நாளாக அமைந்தது. அவர் நடித்துள்ள 'வெந்து தணிந்தது காடு' படத்தின் ஆடியோ, ட்ரைலர் வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில், சிம்பு, இயக்குநர் கெளதம் மேனன், ஏஆர் ரஹ்மான், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், ராதிகா ஆகியோருடன் சிறப்பு விருந்தினர்கள் பலர் கலந்துகொண்டனர். அதேபோல், ஏராளமான சிம்புவின் ரசிகர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று ஆரவாரம் செய்தனர்.

மிரட்டலாக வெளியான ட்ரைலர்

மிரட்டலாக வெளியான ட்ரைலர்

'வெந்து தணிந்தது காடு' படத்தின் 2வது பாகம் கண்டிப்பாக வெளியாகும் என இயக்குநர் கெளதம் மேனன் உறுதியளித்துள்ளார். இதனால், சிம்புவின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இந்நிலையில், 'வெந்து தணிந்தது காடு' படத்தின் ட்ரெய்லரை உலக நாயகன் கமல் வெளியிட்டார். சிம்புவின் வெயிட்டான ஆக்சன் ட்ரீட்டாக அமைந்துள்ள இந்த ட்ரெய்லர், படம் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. மூன்றாவது முறையாக இணைந்துள்ள சிம்பு, கெளதம் மேனன், ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணி, மாஸ் காட்டியுள்ளதாக ரசிகர்கள் கமெண்ட்ச் செய்து வருகின்றனர்.

கமல் படத்தை ரீமேக் செய்ய சிம்பு விருப்பம்

கமல் படத்தை ரீமேக் செய்ய சிம்பு விருப்பம்

இந்நிகழ்ச்சியில் மேடையேறி பேசிய சிம்பு, ரசிகர்களுக்கு செம்மையாக பஞ்ச் வைத்து பேசி அசத்தினார். 'வெந்து தணிந்தது காடு' படத்தின் க்ளைமேக்ஸில் அட்டகாசமான ட்ரீட் ஒன்று வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், கமலிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும் என சிம்புவுக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டது. உடனே "உங்களுடைய எந்த படத்தை நான் ரீமேக் செய்ய வேண்டும் அல்லது எந்த படத்தின் 2ம் பாகத்தில் நடிக்க வேண்டும்" என கமலிடம் சிம்பு கேட்டார்.

சிம்புவுக்கு கமல் விடுத்து அன்புக் கட்டளை

சிம்புவுக்கு கமல் விடுத்து அன்புக் கட்டளை

சிம்புவின் இந்த கேள்விக்கு, நடிகர் கமல்ஹாசனும் உடனடியாக பதிலளித்தார். "அதெல்லாம் வேண்டாம், ரீமேக், இரண்டாவது பாகத்தில் எல்லாம் நடிக்க வேண்டாம். என்னுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும்" என கமல் கேட்டுக் கொண்டார். இதனைக் கேட்ட சிம்பு உட்பட அரங்கத்தில் அமர்ந்திருந்த ரசிகர்கள் அனைவரும் ஆர்ப்பரித்தனர். கமலின் வேண்டுகோளை சிம்புவும் உடனே ஏற்றுக்கொண்டார். இதனால் கமல் - சிம்பு கூட்டணியில் விரைவில் ஒரு படம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X