twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சினிமாவில் என் முதல் நண்பர் சிம்புதான்... ஆர்.ஜே.பாலாஜி சுவாரசிய தகவல்

    |

    சென்னை: ஆர்.ஜே.பாலாஜி நடித்து இணை இயக்குநராக பணியாற்றிய வீட்ல விசேஷம் திரைப்படம் வெற்றிப் படமாக அமைந்தது.

    யங் மங் சங் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பாலாஜி தன்னுடைய அடுத்த படத்திற்கான பணிகளிலும் பிசியாக இருக்கிறார்.

    இந்நிலையில் நடிகர் சிம்புவுடன் தனது நட்பு பற்றி ஆர்.ஜே.பாலாஜி நெகழ்ச்சியாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

     யார் இந்த பாலாஜி

    யார் இந்த பாலாஜி

    ரேடியோவில் ஜாக்கியாக இருந்தபோதே பிரபலமடைந்தவர்தான் பாலாஜி. அவர் திரைப்படங்களை விமர்சனம் செய்ய தொடங்கிய பின்னர் மேலும் பிரபலமானார். ஆனால் சினிமாக்காரர்கள் சிலர் அவருடைய விமர்சனங்களை எதிர்த்தார்கள். பின்னர் புத்தகம் என்ற படத்தில் வாய்ஸ் ஓவர் கொடுத்த பாலாஜி எதிர் நீச்சல் திரைப்படத்தில் தொகுப்பாளராக நடித்திருப்பார்.

     தீயா வேலை செய்யணும் குமாரு

    தீயா வேலை செய்யணும் குமாரு

    அதன் பின்னர் இயக்குநர் சுந்தர்.சி தான் இயக்கிய தீயா வேலை செய்யணும் குமாரு திரைப்படத்தில் அவரை முழு நீள கதாபாத்திரத்தில் அறிமுகப்படுத்தினார். திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் கிரிக்கெட் நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராக பணியாற்றினார் பாலாஜி. நானும் ரவுடிதான் படம்தான் அவருக்கு பெரிய பிரேக் கொடுத்தது.

     எல்.கே.ஜி

    எல்.கே.ஜி

    பின்னர் எல்.கே.ஜி திரைப்படம் மூலம் கதாநாயகனாகவும் எழுத்தாளராகவும் அறிமுகமான பாலாஜி முதல் படத்திலேயே வெற்றி பெற்று விமர்சன ரீதியாகவும் வரவேற்கப்பட்டார். அதன் பின்னர் மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் போன்ற தொடர் வெற்றி படங்களை இணை இயக்கம் செய்தும் கதாநாயகனாக நடித்தும் தன்னுடைய வெற்றியை தக்க வைத்துக் கொண்டார். சமீபத்தில் அவர் கொடுத்த ஒரு பேட்டியில், சினிமாவில் தனக்கு முதலில் கிடைத்த நண்பர் நடிகர் சிம்புதான் என்று கூறியிருக்கிறார்.

     நா தங்கர் பச்சன்

    நா தங்கர் பச்சன்

    முதல் முறையாக பாலாஜிக்கு சிம்பு கால் செய்து,"நா சிம்பு பேசுறேன்" என்று சொன்னபோது, யாரோ மிமிக்ரி செய்து கலாய்க்கிறார்கள் என்று நினைத்து,"சொல்லுங்க, நா தங்கர் பச்சான்தான் பேசுறேன்" என்று பதிலுக்கு கலாய்த்தாராம். பின் அவர் நடிகர் சிம்புதான் என்று உறுதி செய்தவுடன் இருவரும் தொடர்ந்து பேசியுள்ளனர். அப்போது,"சந்தானத்தை நான்தான் அறிமுகம் செய்தேன். உங்களையும் நான்தான் அறிமுகம் செய்ய விருப்பப்படுகிறேன் என்று சிம்பு கூறினாராம்.

     திரும்ப திட்டிவிடுவேன்

    திரும்ப திட்டிவிடுவேன்

    அப்படி ஒரு படத்தில் இயக்குநரிடம் அறிமுகமும் செய்து வைத்தார். ஆனால் அந்த இயக்குநருக்கு என்னை பிடிக்கவில்லை போல. அதனால் சிம்புவிடம்,"நீங்கள் ஷூட்டிங்கில் இல்லாதபோது எனக்கு காட்சி இருந்து, திடீரென இயக்குநர் என்னை,"டேய் இங்க வாடா" என்று கூப்பிட்டால், "இருடா வரேன்" என்றூ பதிலுக்கு பேசிவிடுவேன். அதற்காக திமிர் பிடித்தவன் என்று அர்த்தம் அல்ல. சின்ன வயதிலிருந்தே இதுதான் என்னுடைய சுபாவம். எப்போதும் நீங்கள் என்னை பாதுகாக்க முடியாது. அதனால் இந்த வாய்ப்பு வேண்டாம் என்று தன்மையாக மறுத்துவிட்டதாக பாலாஜி கூறியிருக்கிறார்.

    English summary
    veetla vishesham, co-directed by RJ Balaji, was a hit. Balaji, who is currently acting in the film Yung Mung Chung, is also working on his next film.In this case, RJ Balaji has spoken about his friendship with actor Simbu in an interview.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X