மாநாடு கொடுத்த கம்பேக்… ரீ என்ட்ரியில் அதிரடி காட்டும் சிம்பு… சிறந்த நடிகருக்கான சைமா விருது

பெங்களூரு: சிம்புவின் நடிப்பில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு வரும் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

கடந்தாண்டு வெளியான மாநாடு படத்தின் மூலம் செம்ம மாஸ்ஸாக கம்பேக் கொடுத்துள்ளார் சிம்பு.

மாநாடு படத்தில் சிறப்பாக நடித்து ரசிகர்களை மிரட்டிய சி,ம்புவிற்கு தரமான அங்கீகாரம் தற்போது கிடைத்துள்ளது.

கம்பேக் கொடுத்த சிம்பு என்ற ஆத்மன்

கம்பேக் கொடுத்த சிம்பு என்ற ஆத்மன்

குழந்தை நட்சத்திரமாக அறிமுகம், விடலை பருவத்தில் ஹீரோ அவதாரம், இப்போது அனுபத்தால் மீண்டெழுந்த பக்குவமான நடிகர் என உருமாறிய கலைஞராக ரசிகர்கள் முன் நிற்கிறார் சிம்பு. எப்போதும் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாத நபராக வலம்வந்த சிம்பு, இன்று அசுரத்தனமாக கம்பேக் கொடுத்துள்ளார். சென்ற வருடம் வெளியான 'மாநாடு' திரைப்படம் சிம்புவுக்கு மட்டுமில்லாமல், இந்திய சினிமாவுக்கே ட்ரெண்ட் செட்டாக அமைந்தது.

வெங்கட் பிரபு பேசிய நேர்மையான அரசியல்

வெங்கட் பிரபு பேசிய நேர்மையான அரசியல்

வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு படத்தில், சிம்புவுடன் பிரேம்ஜி, கருணாகரன், எஸ்ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஏ சந்திரசேகர் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது. குறிப்பிட்ட ஒரு சமூகத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படும் மத வெறுப்பு அரசியலை பின்னணியாக வைத்து, நடுநிலையாக உருவான இந்தப் படம், அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

சிம்புவுக்கா நடிக்க சொல்லிக் கொடுக்கணும்?

சிம்புவுக்கா நடிக்க சொல்லிக் கொடுக்கணும்?

மாநாடு படத்தில் அப்துல் காலிக் என்ற கேரக்டரில் நடித்திருந்த சிம்பு, டைம் லூப்பில் சிக்கிக் கொள்வதாக கதை நகரும். ஒரே காட்சித் திரும்ப திரும்ப வந்தாலும், அதனை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் நடித்து அசத்தியிருப்பார் சிம்பு. அவருக்குப் போட்டியாக எஸ்ஜே சூர்யாவும் வில்லத்தனத்தில் அதகளம் செய்திருப்பார். இந்த காம்போ செம்மையாக ஒர்க் அவுட் ஆக, மாநாடு படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வசூலித்தது.

சிறந்த நடிகர் விருது வென்ற சிம்பு

சிறந்த நடிகர் விருது வென்ற சிம்பு

மாநாடு படம் கொடுத்த சூப்பர் டூப்பர் ஹிட், சிம்புவுக்கு சரியான கம்பேக்காக அமைந்தது. இப்போது அடுத்தடுத்து வெந்து தணிந்தது காடு ப்ரோமோஷன், பத்து தல படம் என பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறார் சிம்பு. இந்நிலையில், பெங்களூருவில் நடைபெற்ற சைமா விருதுகள் விழாவில், மாநாடு படத்திற்காக சிறந்த நடிகர் விருதை வென்று அசத்தியுள்ளார் சிம்பு. அதேபோல், இதேபடத்தில் நடித்த எஸ்ஜே சூர்யா சிறந்த வில்லன் விருதை வென்றுள்ளார். இதனால் சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X