For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஆளை விடுங்க!… வடிவேலுவிடம் இருந்து எஸ்கேப் ஆன சிம்புத்தேவன்

  By Mayura Akilan
  |

  வாய்ப்பே கிடைக்காத போது கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி முன்னேறுபவர்கள்தான் புத்திசாலிகள். ஆனால் இரண்டு ஆண்டுகளாக ஓரம்கட்டியிருந்த சினிமாத்துறையில் இருந்து பிரகாசமான வாய்ப்பு கிடைத்தும் அதை தன் செய்கையாலேயே கெடுத்துக் கொண்டாராம் வடிவேலு.

  வடிவேலுவை வைத்து சிம்புத்தேவன் இயக்க இருந்த படம் டிராப் ஆகிவிட்டதாக கோடம்பாக்கத்தில் செய்திகள் கசிகின்றன. இதற்கு காரணம் வடிவேலுவேதான் என்கின்றனர்.

  இப்படியே போனால் இனி டிவியில் மட்டுமே காமெடி நிகழ்ச்சிகளில் வடிவேலுவின் காமெடியை பார்க்க வேண்டும் போலிருக்கும் என்றும் அங்கலாய்க்கிறார்கள். ஆர்பாட்டமாக வந்த அறிவிப்பு திடீரென பிரேக் அடிக்க என்ன காரணம்? மேற்கொண்டு படியுங்களேன்.

  ஆப்படித்த அரசியல் வாய்ஸ்

  ஆப்படித்த அரசியல் வாய்ஸ்

  விஜயகாந்த் மீதுள்ள கோபத்தை எல்லாம் அரசியல் மேடையில் காட்டியதன் விளைவுதான் வடிவேலுவின் வாழ்க்கையில் புயலாக வீச ஆரம்பித்து வீட்டுக்குள் சுருட்டிவிட்டது.

  தெனாலிராமனாக மீண்டும்…

  தெனாலிராமனாக மீண்டும்…

  வாய்பின்றி கிடந்த வடிவேலுவுக்கு கதாநாயகன் அவதாரம் கொடுத்த சிம்புத்தேவன் மூலம் மீண்டும் வாய்ப்பு வந்தது. தெனாலிராமன் படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்தார் சிம்புத்தேவன்.

  இது கண்டிப்பா வருமா?

  இது கண்டிப்பா வருமா?

  ஒவ்வொரு முறை அவரது புதுப்பட அறிவிப்புகள் பற்றிய அதிகாரபூர்வமற்ற செய்திகள் வரும்போதெல்லாம் அதை ஆவலோடு படித்து அங்கலாய்த்துக் கொள்வார்கள் அவரது ரசிகர்கள். "இந்த படமாவது கண்டிப்பா வருமா?" என்று கேட்டுக்கொள்வார்கள்.

  மீடியாக்களில் செய்தி மட்டுமே

  மீடியாக்களில் செய்தி மட்டுமே

  ஊடகங்களில் எல்லாம் வடிவேலு நடிக்கிறார் என்ற செய்திகள் வருமே தவிர, படம் ஏதும் இதுவரை வரவில்லை. படப்பிடிப்பு நடந்ததாகவோ, படம் வளர்ந்து கொண்டிருப்பதாகவோ கோடம்பாக்கத்தில் பேச்சு ஏதுமில்லை.

  உறுதிப் படுத்திய வடிவேலு

  உறுதிப் படுத்திய வடிவேலு

  இந்த நிலையில்தான், சிம்புதேவன் இயக்கப் போவதாகவும், அதில் வடிவேலு நடிக்கப் போவதாகவும் தகவல்கள் கசிந்தன. இதை வடிவேலுவும் தனது பேட்டி ஒன்றில் உறுதிபடுத்தினார். சிம்புதேவனும், அதை மறுக்கவில்லை.

  விட்ட மார்க்கெட்டை பிடிச்சிரலாம்

  விட்ட மார்க்கெட்டை பிடிச்சிரலாம்

  இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு ஹீரோவாக நடித்த இம்சை அரசன் 23ம் புலிகேசி படம்தான், வடிவேலுவை ஹீரோ அந்தஸ்துக்கு உயர்த்தியது. இதனால், அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியானால் விட்ட மார்க்கெட்டை பிடிக்கலாம் என்பது வடிவேலுவின் கணக்காக இருந்தது. ஒருவிதத்தில் சொன்னால், வடிவேலுவின் சினிமா மறுபிரவேசத்துக்கு இந்தப் படமே பெரிதாக எதிர்பார்க்கப்பட்டது.

  எதிர்க்கட்சித் தலைவர் வேணும்

  எதிர்க்கட்சித் தலைவர் வேணும்

  ஆனால் படம் திடீரென டிராப் ஆகிவிட்டது என்ற பேச்சு அடிபடுகிறது. இதற்கு முழு முதற் காரணமே வடிவேலுதான் என்கிறார்கள். படத்தில் எதிர்க்கட்சி தலைவர் என்ற பாத்திரத்தை வலிய நுழைக்க வேண்டும் என்கிறாராம் சிம்புதேவனிடம். சிம்பு எழுதிய டயலாக்குகளிலும் நிறைய கை வைத்தாராம்.

  விஜயகாந்த் மீதான கோபம்

  விஜயகாந்த் மீதான கோபம்

  வடிவேலு மார்க்கெட் இழந்ததே, விஜயகாந்த் மீதுள்ள தனிப்பட்ட கோபத்தை தீர்த்துக்கொள்ள சட்டசபை தேர்தல் நேரத்தில் தி.மு.க. மேடையை பயன்படுத்த முயன்றதுதான். இப்போது, இம்சை அரசன் பார்ட்-2ல் எதிர்கட்சி தலைவர் என்றொரு கேரக்டரை உருவாக்கி, அந்த கேரக்டரை நசுங்கிப் போகிற அளவுக்கு டேமேஜ் செய்ய வேண்டும் என்பது வடிவேலுவின் விருப்பமாகவும் இருக்கிறதாம்.

  ஆளை விடுங்க வடிவேலு

  ஆளை விடுங்க வடிவேலு

  வைகைப்புயலை அமைதிபடுத்த முயற்சித்த சிம்புதேவன், அது சுலபம் அல்ல என்பதை தற்போது புரிந்து கொண்டு விட்டார் என்கிறார்கள். இதையடுத்து சிம்புதேவன், "ஆளை விடுங்க வடிவேலு" என்று இப்படத் திட்டத்திலிருந்தே விலகிவிட்டாராம்.

  ஆப்ரிக்காவில் வடிவேலு

  ஆப்ரிக்காவில் வடிவேலு

  இது இப்படி இருக்க வடிவேலுவை வைத்து கே.எஸ். ரவிக்குமார் ஆப்ரிக்காவில் வடிவேலு என்ற படத்தை இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த படமாவது வெளியாகுமா? அந்த வடிவேலுவுக்குத்தான் வெளிச்சம்.

  English summary
  Director Simbudevan Dropped Vadivelu’s film Tenaliraman a sources said.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X