Don't Miss!
- News
முதல்வர் ஸ்டாலினுடன் ஒரே மேடையில் ஆளுநர் ஆர்.என்.ரவி.. அலங்கார ஊர்தியில் தமிழ்நாடு வாழ்க கோலம்!
- Sports
அடிதூள்.. ஐபிஎல் 2023 தேதிகள் இதுதான்.. ரசிகர்கள் எதிர்பார்க்காத மெகா மாற்றமும் உண்டு.. முழு விவரம்
- Finance
IBM அறிவிப்பால் ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி.. 3900 பேர் பணிநீக்கம்.. காரணம் என்ன தெரியுமா..?
- Automobiles
"தாலாட்டும் காற்றே வா..." நடிகர் அஜித் பயன்படுத்திய ஜீப் மாறி இருக்கே!! ஆனால் உண்மையில் எந்த வாகனம் தெரியுமா?
- Lifestyle
பெண்கள் வயாகரா எடுத்துக்கொள்ளலாமா? எடுத்துக் கொண்டால் என்ன நடக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
- Technology
மண்டை மேல் இருக்குற கொண்டைய மறந்த Infinix! ரூ.9,999க்கு புது போன் அறிமுகம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
கசங்கிப் போன சட்டை.. புட்டி கண்ணாடி போட்டாலும்.. ஸ்டைல் சாம்ராட் ரஜினி தான்.. ரசிகர்கள் வெறித்தனம்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்காக வெளியான ஜெயிலர் படத்தின் அறிமுக வீடியோ காட்சியை பார்த்த ரசிகர்கள் #Jailer ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.
தலைவா.. வெறித்தனம் என கத்தியபடியே அவர்கள் பதிவிட்டு வரும் போஸ்ட்டுகள் இந்தியளவில் ட்விட்டரில் டிரெண்டாகி வருகின்றன.
இயக்குநர் நெல்சன் நிச்சயம் தரமான சம்பவத்தை சத்தமே இல்லாமல் செய்து வருகிறார் என நம்புகிறோம் என ஜெயிலர் பட இயக்குநரையும் பாராட்டி வருகின்றனர்.
ரஜினிகாந்தின்
புதிய
கூலிங்
கிளாஸை
கவனிச்சீங்களா?
திடீரென
கண்ணாடியை
மாற்ற
என்ன
காரணம்
தெரியுமா?

ஜெயிலர் இன்ட்ரோ வீடியோ
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் ஒன்லி ஒன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தின் அட்டகாசமான அறிமுக வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. பிரம்மாண்ட செட், ஃப்ளைட் ஜெட் எல்லாம் இல்லாமல் ரொம்பவே எளிமையாக இந்த அறிமுக வீடியோவை இயக்குநர் நெல்சன் உருவாக்கி உள்ளது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

டிரெண்டாகும் ஜெயிலர்
சட்டையோட கையை மடக்கி விட்டால் கூட ஸ்டைல் தான் பாஸ் என ரஜினியை ரொம்பவே எளிமையான முறையில் அவரது ஸ்டைலை பிரம்மாண்டமாக காட்சிப்படுத்த முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார் இயக்குநர் நெல்சன். ரஜினி ஸ்டைல் பண்ணுங்க என தர்பார் படத்தில் ரஜினியை டார்ச்சர் பண்ணது போல எல்லாம் பண்ணாமல் ரியல் ரஜினிஸத்தை நெல்சன் கொண்டு வரப் போகிறார் என ரசிகர்கள் ஃபயர் விட்டு வருகின்றனர்.

நெல்சனோட ரஜினி
இது நெல்சனோட ரஜினி என இந்த ரசிகர் முத்துவேல் பாண்டியனின் ஸ்டில்லுடன் கமெண்ட் போட்டுள்ளார். பாலசந்தரின் ரஜினி, பாலுமகேந்திரா ரஜினி, கே.எஸ். ரவிக்குமார் ரஜினி, சுரேஷ் கிருஷ்ணா ரஜினி, ஷங்கர் ரஜினி, பா. ரஞ்சித் ரஜினி எல்லாம் பார்த்த ரசிகர்களுக்கு நெல்சனோட ரஜினி எப்படி இருக்கப் போகிறார் என்பதை பார்க்கவே மொத்த பேரும் வெயிட்டிங்.

கசங்கிப் போன சட்டை
கோட் சூட், ரோலக்ஸ் வாட்ச், ரேபான் சன் கிளாஸ் அணிந்து கொண்டு வந்து தான் ஸ்டைல் காட்ட வேண்டும் என்றெல்லாம் இல்லை. என் தலைவன் கசங்கிப் போன சட்டை மற்றும் புட்டி கண்ணாடியுடனுமே ஸ்டைல் சாம்ராட்டாக காட்சி தருவார் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.