»   »  குஷ்புவின் 2015 சிம்ப்ளி சூப்பர்ப் செல்பிக்கள்...

குஷ்புவின் 2015 சிம்ப்ளி சூப்பர்ப் செல்பிக்கள்...

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகையாக, சீரியல், சினிமா தயாரிப்பாளராக, சுந்தர்.சியின் மனைவியாக, அரசியல்வாதியாக பன்முகம் காட்டுகிறார் குஷ்பு. இப்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 'சிம்ப்ளி குஷ்பு' நிகழ்ச்சியின் இயக்குநராகவும், ஒருங்கிணைப்பாளராகவும் கலக்கி வருகிறார்.

பிரபல நட்சத்திரங்களை பேட்டி காண்பதுதான் என்றாலும் குஷ்புவின் கலர்ஃபுல் கேள்விகள், நிகழ்ச்சியின் டிஆர்பியை அதிகரித்து வருகிறது. நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஒவ்வொரு பிரபலங்களையும் செல்பி எடுத்து அதனை தனது டுவிட்டர், ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றி மரியாதை செய்து வருகிறார்.

செல்பி எடுக்காவிட்டால் சமுதாயத்தை விட்டே தள்ளி வைத்து விடும் அளவுக்கு நிலைமை சற்று மோசமாக உள்ள சமுதாயத்தில்தான் நாம் அனைவருமே வாழ்ந்து வருகிறோம். இந்த செல்பி மோகம் பிரபலங்களையும் கூட விட்டு வைத்ததில்லை. நம்முடைய பிரதமர் மோடியும் இதற்கு விதி விலக்கல்ல... அனைவரும் இன்றைக்கு செல்பி புள்ளைகளாகவே மாறி வருகின்றனர். 2015ம் ஆண்டில் குஷ்புவிற்கு பல பிளாஷ் பேக்குகள் இருந்தாலும் குஷ்புவின் பெஸ்ட் செல்பிகளை உங்களுக்கு தருகிறோம்.

செல்பியும் குஷ்புவும்

செல்பியும் குஷ்புவும்

செல்பி எடுப்பதில் எனக்கு அவ்வளவாக ஈடுபாடு கிடையாது; என்னோட சேர்ந்து நீங்க செல்பி எடுக்கிறது, சுத்தமா பிடிக்காது! அதனால, என் கூட சேர்ந்து புகைப்படம் எடுத்துக்க விரும்புனா, உங்க நண்பர்களை வைச்சு க்ளிக்பண்ண சொல்லுங்க கூறி வந்த குஷ்புவே இன்றைக்கு செல்பி புள்ளையாகிவிட்டார்.

அரண்மனை2 குழு

அரண்மனை2 குழு

அரண்மனை 2 திரைப்படம் ரிலீசுக்கு தயாராகிவிட்டது. திரிஷா, ஹன்சிகா, கோவை சரளா உடன் சந்தோசமாக செல்பி எடுத்த குஷ்பு.

குடும்பத்துடன் குஷ்பு

குடும்பத்துடன் குஷ்பு

தன் குழந்தைகளுடன் உற்சாகமாக பொழுதுபோக்க அதிக ஆர்வம் கொண்ட குஷ்பு, அவ்வப்போது குழந்தைகள் மற்றும் கணவருடன் செல்பி எடுத்து பதிவேற்றி உற்சாகமடைவார்.

குஷ்பு வித் சுந்தர். சி

குஷ்பு வித் சுந்தர். சி

கணவர் சுந்தர். சி உடனான சந்தோச தருணத்தை செல்பி உடன் கொண்டாடும் குஷ்பு...

கமலுடன் குஷ்பு

கமலுடன் குஷ்பு

உலக நாயகன் கமலுடன் எடுத்துக்கொண்ட செல்பி, சிம்ப்ளி குஷ்புவில் பங்கேற்க வந்த போது எடுத்தது. நிகழ்ச்சியில் பழைய நினைவுகளை அசைபோட்ட கமலுடன், பழைய உற்சாகத்துடன் நடனமாடினார் குஷ்பு.

ஸ்ருதியும் குஷ்புவும்

ஸ்ருதியும் குஷ்புவும்

அப்பா கமலைப் போலவே போல்டாக பதிலளிக்கக் கூடியவர் ஸ்ருதி. சிம்ப்ளி குஷ்புவில் பங்கேற்றபோது எடுத்த செல்பி இது.

விஷாலுடன் உற்சாகம்

விஷாலுடன் உற்சாகம்

இளம் நடிகர்களுடன் குஷ்புவிற்கு நட்பு ரீதியான பாசம் உண்டு. தன் கணவர் சுந்தர் சி இயக்கிய ஆம்பள படத்தில் நடித்த விஷால் உடன் ஒரு உற்சாக தருணத்தில் ஜாலி செல்பி.

கார்த்தியுடன் செல்பி

கார்த்தியுடன் செல்பி

நடிகர் கார்த்தி உடன் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற போது எடுத்த சூப்பர் செல்பி இது.

சிம்பு உடன் சிம்ப்ளி குஷ்பு

சிம்பு உடன் சிம்ப்ளி குஷ்பு

சிம்ப்ளி குஷ்பு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த சிம்பு உடன் ஒரு உற்சாக செல்பி...

விஜய் வித் குஷ்பு

விஜய் வித் குஷ்பு

நடிகர் விஜய் உடன் வில்லு படத்தில் செம குத்து டான்ஸ் ஆடியிருப்பார் குஷ்பு. ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற போது சிம்பிளாக எடுத்துக்கொண்ட செல்பி இது.

செல்பியும் குல்பியும்

செல்பியும் குல்பியும்

பாக்யராஜ் மகனும், நடிகருமான சாந்தனுவின் திருமணத்தில் கலந்து கொண்ட பார்த்திபன், நடிகை குஷ்புவுடன் செல்பி எடுத்து அதனை தன் பேஸ்புக் பக்கத்தில் போட்டதோடு, ‘செல்பி வித் குல்பி' என்று கருத்து போட்டார். அதற்கு லைக் சும்மா அள்ளியது.

பிரபு உடன் குஷ்பு

பிரபு உடன் குஷ்பு

80ம் ஆண்டு நடித்த நட்சத்திரங்களின் நட்பு புதுப்பித்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குஷ்பு நீண்ட நாட்களுக்குப் பிறகு பிரபு, வெங்கடேஷ், சத்யராஜ் உடன் எடுத்துக்கொண்ட செல்பி... இதுவும் 2015ம் ஆண்டில் குஷ்புவின் உற்சாக பகிர்வுதான்.

தனி ஒருவனுடன் குஷ்பு

தனி ஒருவனுடன் குஷ்பு

தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடித்த அரவிந்த் சுவாமியுடன் குஷ்பு எடுத்துக் கொண்ட ஸ்பெஷல் செல்பி

English summary
Kollywodd stars have been trying to emulate the magic and the selfie obsession has caught the fancy of almost all the stars in the industry. We take a look at some of Kushboo’s best selfies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil