»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

கடைசியாக போலீசாரிடம் சிக்கினார் சிம்ரன். அவரை மூன்று நேரம் போலீசார் கேள்விகளால் குடைந்து எடுத்துவிட்டனர். சிம்ரன்எழுத்து மூலம் தந்த வாக்குமூலங்களை போலீஸார் பதிவு செய்து கொண்டனர்.

சிம்ரனின் தங்கையான நடிகை மோனல் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக நடிகை மும்தாஜ்,அவரது மேனேஜர் ரியாஸ், மோனலின் காதல் பிரசன்னா ஆகியோரை போலீசார் விசாரித்து முடித்துவிட்டனர்.

ஆனால், சிம்ரன் மட்டும் போலீசாருக்கு தண்ணி காட்டி வந்தார். இந் நிலையில் சென்னை வீட்டையே காலி செய்துவிட்டுமும்பைக்குப் பறந்தார். இதையடுத்து மும்பையில் சென்று அவரிடம் விசாராணை நடத்த தமிழக காவல்துறை முடிவுசெய்திருந்தது.

இந் நிலையில் அவர் ஒரு படப்பிடிப்புக்காக சென்னை வருவது தெரிந்தது. இதையடுத்து சிம்ரனை எப்படியும் விசாரித்துவிடமுடிவெடுத்த போலீசார் அந்தப் படத்தின் தயாரிப்பாளரிடம் சிம்ரன் தங்கும் ஹோட்டல் விவரங்களைப் பெற்றனர்.

திட்டமிட்டபடி நேற்று காலை படப்பிடிப்பில் கலந்து கொள்ள அவர் சென்னை வந்தார். கோடம்பாக்கத்தில் ஒரு ஹோட்டலில்தங்கினார். இதையடுத்து அவரது அறைக் கதவைத் தட்டிய போலீசார் 3 மணி நேரம் விசாரித்தனர்.

போலீஸார் சிம்ரனிடம் ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்ட 180 கேள்விகளைக் கொடுத்தனர். அவற்றிற்கு சிம்ரன் எழுத்துப்பூர்வமாகபதில் தந்துள்ளார். இது குறித்து போலீஸார் விளக்கம் தர மறுத்துவிட்டனர்.

பிரசன்னாவின் சகோதரி நடன இயக்குனர் கலா, மோணலின் தாயார் ஆகியோரிடமும் விசாரணை நடந்தப்படும் என்று தெரிகிறது.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil