Don't Miss!
- Lifestyle
பெற்றோர்களே! உங்க குழந்தை அறிவாளியாகவும் சிறந்தவர்களாகவும் வர நீங்க என்ன செய்யணும் தெரியுமா?
- News
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்! 16 எம்எல்ஏக்கள் உட்பட 62 பேர் கொண்ட டீமை வெயிட்டாக களமிறக்கிய காங்கிரஸ்!
- Finance
வெயிட்டிங்.. ஏறுமா ஏறாதா.. நைகா நிறுவன முதலீட்டளார்கள் எதிர்பார்ப்பு.. நிபுணர்களின் செம ரிப்போர்ட்!
- Sports
என்னப்பா நடக்குது இங்க.. நியூசி,-ன் அதிவேக பவுலரை அசால்ட் செய்த சுப்மன் கில்.. வாயடைத்துப்போன ரோகித்
- Technology
Android போன்களுக்கு புது சோதனை.! 'இதை' செஞ்சுடாதீங்க.! மானம், பணம் எல்லாமே போய்விடும்.! எச்சரிக்கை.!
- Automobiles
குறைவான விலையில் மைலேஜை வாரி வழங்கும் பைக்! பழைய நண்பன் ஹீரோவின் கதையை முடிக்க ஸ்கெட்ச் போட்ட ஹோண்டா!
- Travel
கன்பார்ம் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டின் பயண தேதியை மாற்ற வேண்டுமா – இப்படி செய்யுங்கள்!
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
சிம்ரனுக்கு ஜோடின்னா அது விஜய்தான்... பிரபல ஹீரோவின் சாய்ஸ்!
சென்னை : பிரஷாந்த், சிம்ரன் நடிப்பில் உருவாகியுள்ள படம் அந்தகன். இந்தியில் வெற்றி பெற்ற அந்தாதூன் படத்தின் ரீமேக்காக இந்தப் படம் உருவாகியுள்ளது. படத்தை இயக்குநர் தியாகராஜன் இயக்கியுள்ள நிலையில் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கொரோனா
பொது
நிவாரணம்…..
பிரஷாந்த்
அவரது
தந்தை
தியாகராஜன்
ரூ.10
லட்சம்
நிதி
!

நடிகர் பிரஷாந்த்
நடிகர் பிரஷாந்த் ஒரு காலகட்டத்தில் சூப்பர் டூப்பர் ஹீரோவாக ரசிகைகளின் கனவு கண்ணனாக இருந்தவர். அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்து வந்தவர். இவரது ஜீன்ஸ், பார்த்தேன் ரசித்தேன், ஜோடி உள்ளிட்ட படங்கள் ரசிகர்களின் எவர்கிரீன் பேவரிட் படங்களாக தற்போதும் இருந்து வருகின்றன.

மீண்டும் இணைந்த ஜோடி
இந்நிலையில் ஒரு கட்டத்தில் இவருக்கு வாய்ப்புகள் குறையத் துவங்க, படங்களில் நடிப்பதை இவர் குறைத்துக் கொண்டார். இந்நிலையில் நீண்ட காலத்திற்கு பிறகு தற்போது தனது தந்தை தியாகராஜனின் இயக்கத்தில் பிரஷாந்த் நடித்துள்ள படம் அந்தகன். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாகியுள்ளார் சிம்ரன்.

பிரஷாந்த் -சிம்ரன் 6வது படம்
இவர்கள் இருவரும் இணையும் 6வது படம் இது. முன்னதாக ஜோடி உள்ளிட்ட 5 படங்களை வெற்றிப்படங்களாக இவர்கள் கொடுத்துள்ள நிலையில், தற்போது இவர்கள் மீண்டும் இணைந்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. இந்தப் படம் இந்தியிலிருந்து ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

இந்தி ரீமேக்
இந்தியில் பிரபல ஹீரோ ஆயுஸ்மான் குரானா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த அந்தாதூன் படத்தின் ரீமேக்காக இந்தப் படம் உருவாகியுள்ளது. பிரஷாந்தின் ஸ்டார் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை தனது வி கிரியேஷன்ஸ் சார்பில் வெளியிடுகிறார் கலைப்புலி எஸ் தாணு.

சந்தோஷ் நாராயணன் இசை
படத்தில் மேலும் பிரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரக்கனி, யோகிபாபு, ஊர்வசி, கேஎஸ் ரவிக்குமார், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள நிலையில், படத்தின் பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. படம் விரைவில் ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது.

படத்தின் பிரமோஷன்
இதனிடையே படத்தின் பிரமோஷனை படக்குழு முடுக்கி விட்டுள்ளது. சமீபத்தில் படத்திற்காக அளித்துள்ள பேட்டியில் படம் குறித்து பல விஷயங்களை பிரஷாந்த் மற்றும் சிம்ரன் பகிர்ந்துள்ளனர். அப்போது ஒளிப்பதிவு, கேமரா உள்ளிட்ட பல விஷயங்களில் பிரஷாந்த் மிகவும் திறமைவாய்ந்தவர் என்று சிம்ரன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
Recommended Video

பிரஷாந்த்திற்கு ஐஸ்வர்யா ராய் பெஸ்ட் ஜோடி
தொடர்ந்து பேசிய அவர், பிரஷாந்திற்கு ஜோடி என்றால் அது ஐஸ்வர்யா ராய்தான் என்றும் கூறியுள்ளார். இதேபோல சிம்ரனுக்கு பெஸ்ட் ஜோடி என்றால் அது விஜய்தான் என்று பிரஷாந்த் தெரிவித்தார். அவர்கள் இருவருக்கும் இடையிலான அந்த காம்பினேஷன் மிகவும் சிறப்பானது என்றும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.